பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9


“அப்போ, நீ இன்னிக்கு விழாவுக்கு வரப் போவதில்லையா, மணி?”

சற்று அதட்டலாகவே கேட்டாள் அக்காள் கோமதி.

“என்ன பெரிய விழா? கொடியேத்தறதும் பேசறதும்தானே! தேசிய கீதம் முடியறவரைக்கும் இருந்தால் ஒரு சாக்லேட் கிடைக்கும்! சாக்லேட் வாங்கித் தின்ன, நீங்க வேண்டுமானால் போங்க. நான் வரலே.”

அவன் பிடிவாதமாகவும் கிண்டலாகவும் கூறினான். இது ரகுவுக்கும் கோமதிக்கும் வேதனையாக இருந்தது. என்ன சமாதானம் கூறி அழைத்துச் செல்வது என்றும் அவர்கட்குப் புலப்படவில்லை.

இந்தச் சமயத்தில் அவர்கள் மாமா அங்கே வந்தார். வயதானவர். நன்கு படித்தவர். வரும் போதெல்லாம் ஏதாவது தின்பண்டங்கள் வாங்கி வருவார். வேடிக்கையாகப் பேசுவார். கதைகளெல்லாம் சொல்லுவார். அதனால் மணி உட்பட, அவரை எல்லோருக்கும் பிடிக்கும்.

கோமதி, ரகு, மணி மூவரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்தார். வந்து கொண்டே கேட்டார்: