பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



19


“இந்தக் கடமைகளைச் செய்யும்போது அவர்களின் சுதந்திரம் பலவகையான கட்டுப் பாடுகளால் கட்டுப்படுத்தப்படுது. மூக்கணாம் கயிறு போடப்பட்ட மாடு முறையாக வேலை செய்யும். மூக்கணாம் கயிறு இல்லாத மாடு மக்கள் கூட்டத்துக்குள் ஓடினால் பலருக்கும் காயம் ஏற்படும். ஏன், உயிருக்குக் கூட ஆபத்து விளையும்.”

“தெருவிலே கைத்தடியைச் சுழற்றிச் செல்ல எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால், அதை மற்றவர்களின் மேல் படாமல் சுழற்றத் தான் உரிமையுண்டு.”

“எனவே, ஒவ்வொருவரும் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள கட்டுப்பாட்டோடு கூடிய கடமையைச் செய்ய வேண்டும்.”

“இப்போ, மணியை எடுத்துக் கொள்வோம். அவன் தன் கடமைகளை மறந்து விட்டான். வீட்டிலும் பள்ளியிலும் உள்ள கட்டுப்பாடுகளை வெறுக்கிறான். தனக்குள்ள சுதந்திரத்தைத் தவறான வழியிலே ஊர் சுற்றி விளையாடப் பயன்படுத்த விரும்புகிறான். இதற்காக அவன் வீட்டிலும் பள்ளியிலும் கண்டிக்கப்படுவான். ஏன், தண்டிக்கவும் படலாம் இல்லையா?”