பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



20


மாமா இவ்வாறு கூறியபோது மணி தன் தவறை உணர்ந்தவன்போல் காணப்பட்டான்.

“மன்னிக்கனும் மாமா. சுதந்திரம்’னா விருப்பப்படி நடக்கிறதுன்னு தப்பா நெனச்சுட்டேன். அதனாலே கடமை தவறி நடக்கப் போனேன். கடமையும் கட்டுப்பாடும்தான் நம் சுதந்திரத்தைக் காக்கும் கேடயங்கள். அதை இப்போ நன்றாக உணர்ந்துட்டேன். இனி ஒரு போதும் கடமை தவறி நடக்கமாட்டேன். இது உறுதி!”

மணி மன உறுதியோடு கூறிய வார்த்தைகள் மாமாவுக்கு மகிழ்ச்சியளித்தன. கோமதியும் ரகுவும் பூரிப்படைந்தனர்.

“நம் சுதந்திரத்தைக் காப்பது முக்கியம். அதைவிட பிறர் சுதந்திரத்தை மதித்துப் போற்றுவது மிகவும் அவசியம். பிறர் சுதந்திரத்தை நாம் பறித்தால், நம் சுதந்திரம் பறிபோய்விடும், இதை ஒரு கதையின் மூலம் சொல்றேன், கேளுங்கள்.”

மாமா கதை சொல்வதாகச் சொன்னதும் மூவரும் பேருவகை அடைந்தனர். மாமா சொல்லப் போகும் கதையைக் கேட்க மூவரும் தயாராயினர். ஆவலோடு அவர் முகத்தைப் பார்த்த