பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6


மணியை நெருங்கினாள் கோமதி. “என்னடா, மணி! இன்னும் நீ புறப்படவில்லையா? இன்றைக்குச் சுதந்திர தினம் என்பதுகூட மறந்துவிட்டதா? கொடியேற்று விழாவுக்கு நாம் போக வேண்டாமா? இதோ, ரகுகூட தயாராகி விட்டான் பார்!”

கோமதி கூறியது எதையும் கேட்க விரும்பாதவன் போல் விளையாடிக் கொண்டிருந்தான். தான் பேசியதை ரகு சட்டை செய்ததாகத் தெரியவில்லை. இதைக் காண கோமதிக்குக் கோபம் வந்தது.

இதற்குள் அங்கு வந்தான் ரகு.

“என்ன, மணி! பள்ளிக்கு இன்னும் புறப்படலையா? ஏழு மணிக்கே மாணவர்கள் எல்லோரும் பள்ளி வரணும்’னு தலைமையாசிரியர் சொல்லியிருக்காரே. இப்போ, மணி ஆறு ஆகுது. இன்னும் நீ குளிச்சு, டிரஸ் செய்யாமல் நிக்கிறே! என்னிக்கும்போல இன்னிக்கும் நீ ‘தாமதத் திலகம்’ தானா?” கூறிச் சிரித்தான் ரகு.

ரகு சிரித்தது மணிக்குப் பிடிக்கவில்லை. எரிச்சலாக இருந்தது. அதற்கேற்ப முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டிருந்தான் மணி. கோமதி மீண்டும் கேட்டாள்: