பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7


“எப்பவுமே வகுப்புக்குப் பிந்தியே வருவே. இன்னிக்கு சுதந்திர தின விழா. இதற்காவது கொஞ்சம் முந்திப் போகக் கூடாதா? இன்னும் குளிக்காம கூட விளையாடிட்டிருக்கியே?”

கோமதியை நோக்கி நிமிர்ந்து பார்த்தான். தன் குரலைச் சற்று உயர்த்திப் பேசினான்:

“ஆமாம். இன்னிக்குக் குளிக்கப் போவதில்லை. சுதந்திர தின விழாவுக்கும் வரப் போவதில்லை.”

மணி தன் முடிவை உறுதியாகக் கூறினான்.

இவன் கூறிய பதில் ரகுவுக்கு வியப்பாக இருந்தது. காரணம் தெரிந்து கொள்ள விரும்பினான்.

“என்னடா, மணி! ஏன் இந்த சத்தியாக்கிரகம்?”

"இன்னிக்குச் சுதந்திர தினம் தானே?” அசட்டையாகக் கேட்டான், மணி.

“அதில் என்னடா உனக்குச் சந்தேகம்? இன்று ‘சுதந்திர தினம்’ தான்.” வேகமாகப் பதில் கூறினாள் கோமதி.