பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரான் டைகிரீஸ் என்ற இரு ஆறுகளுக்கு இடையே இந்நாடு அமைந்துள்ள தால் இப்பெயர் பெற்றது. இவ்விரு பேராறுகளும் இந்நாட் டைச் செழிமைப்படுத்துகின்றன. இறுதியில் இவ்விரு ஆறுகளும் கடலில் கலக்குமிடத்தில் ஒன்றிணை கின்றன. பழங்காலம் முதலே நாகரிகச் சிறப் புமிக்க நாடாக இந்நாடு விளங்கிவரு கிறது. இந்நாடு 4,84,924 ச. கி. மீ. பரப்பளவையும் சுமார் ஒன்றரைக் கோடி ம க் க ள் தொகையையும் ஈராக் கொண்டதாகும். இந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாவர். எல்லோரும் அரபி மொழியே பேசு வர். இந்நாட்டின் முதன்மைத் தொழி லாக விளங்குவது விவசாயமாகும். இங்கு பருத்தி, கோதுமை, பார்லி போன்ற விளைபொருட்கள் உற்பத்தி 98 யானாலும் பேரீட்சம் பழமே மிக அதிகமாக விளைகின்றது. உலகெங் கும் கிடைக்கும் மொத்தப் பேரீச்சம் பழத்தில் 80% ஈராக்கில் விளை கின்றது. இங்குள்ள வளர்ப்பு மிருகங்களில் ஒட்டகம், ஆடு, மாடு முக்கியமான வைகளாகும். கம்பளமும், பருத்தியும், பேரீச்சம் பழமும் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாகும். இந்நாட்டில் பெட்ரோலியம் எண் ணெய் மிகுதியாகக் கிடைக்கிறது. பெரும் குழாய்கள் மூலம் பெட்ரோ லிய எண்ணெய் மத்திய தரைக்கடல் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்படுகிறது. இந்நாட்டின் தலைநகர் பக்தாது ஆகும். புகழ்மிக்க இந்நகரில் காதர் மொகிய்யித்தீன் ஜீலானி போன்ற மெய்ஞ்ஞான மேதைகளின் அடக்கத் தலங்கள் உள்ளன. ஈரான்: மேற்கு ஆசிய நாடுகளுள் ஒன்று. அண்மைக் காலம்வரை பார சீகம்" என வழங்கப்பட்ட நாடுதான் தற்போது ஈரான்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஈரான் நாட்டின் மொத்தப் பரப்பளவு 16,48,000 ச.கி. மீ. ஆகும். மக்கள் தொகை சுமார் நாலேகால் கோடி ஆகும். நாட்டின் தலைநகரம் தெஹ்ரான் என்பதாகும். ஈரான் நாடு மலைகளால் சூழப்பட் டுள்ளது. உள்நாட்டின் பெரும்பகுதி பாலைவனமாகும். இங்கு மக்கள் அதி கம் வாழ்வதில்லை. தெற்குக் கடற் பகுதிகள் மிகச் செழிப்பானவையா கும். அதே போன்று வடக்கிலுள்ள காஸ்பியன் கடற்கரைப் பகுதிகள் வளமான தாழ் நிலப் பகுதிகளாக அமைந்துள்ளன. காஸ்பியன் கடல்