பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 உலகிலேயே மிகப் பெரிய யாகும். இந்நாட்டில் கோடைகாலம் ஈரான் வெப்பம் மிகுந்ததாகவும் குளிர்காலம், மிகவும் குளிர் மிக்கதாகவும் இருக்கும். பாரசீக வளைகுடாவிற்கு வடக்கில் உள்ள குசித்தான் சமவெளியில் பெட் ரோலியக் கிணறுகள் ஏராளமாக உள்ளன. இந்நாட்டின் முக்கியத் தொழில் வேளாண்மைத் தொழிலாகும். கோது' மை, பார்லி, சக்கரை, பீட், பேரிச்சம் பழம், பருத்தி, தேயிலை, புகையிலை முதலியவை முக்கிய விளைபொருள் களாகும். ஈரான் மக்கள் தொகையில் 48 விழுக்காட்டினர் நகரங்களிலும் வீடு களிலும் வாழ்கின்றனர். மற்றையோர் அடிக்கடி இடம் பெயரும் நாடோடி களாக வாழ்கின்றனர்.இவர்கள் ஆடு, மாடு, குதிரை முதலியவற்றை மேய்க் கின்றனர். பாரம் சுமக்க கழுதைகளை குதிரைகளையும் பயன்படுத்துகின் றனர். இந்நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படையாக பெட்ரோலும் கம்பள நெசவுத் தொழிலும் அமைந்துள்ளன. ஏரி உச்சநீதிமன்றம் பாரசீகக் கம்பளங்கள் உலகப் புகழ் பெற்றவைகளாகும். பெட்ரோலியம், கம்பளங்கள், தோல், பேரீச்சம்பழம், உலர்த்தப்பட்ட பழங்கள் ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. ... * 2,500 ஆண்டுகட்கு முன்பு சார தூஷ்டிரர் என்பவர் ஏற்படுத்திய மதம் அந்நாட்டில் இருந்தது. இம் மதத்தைப் பின்பற்றியவர்கள் பார்சி கள் என அழைக்கப்பட்டனர். இன்று ஈரான் மக்கள் தொகையில் 98 விழுக் காட்டினர் இஸ்லாமிய மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்களாவர். 1980ஆம் ஆண்டு முதல் மன்ன ராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்துள்ளது. பாரசீகம் நாட்டின் தேசிய மொழியாகும். உச்சநீதிமன்றம் இந்திய அரச மைப்புச் சட்டப்படி அனைத்து நீதி மன்றங்களுக்கும் தலைமையானதாக அமைந்திருப்பது உச்சநீதி மன்றம்’ ஆகும். \ இதனை 'சுப்ரீம் கோர்ட்' என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். உச்சநீதி மன்றத்தில் ஒரு தலைமை நீதிபதியும் பதினேழு நீதிபதிகளும் இருப்பர். தலைமை நீதிபதியையும் பிற நீதிபதிகளையும் குடியரசுத் தலைவரே நியமிப்பார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணி யாற்ற சில தகுதிப்பாடுகள் அவசியம். இந்தியக் குடிமகனாகவும் உயர்நீதி மன்ற்ம் அல்லது உயர்நீதிமன்றங் களில் ஐந்து ஆண்டுகள் நீதிபதி யாகப் பணியாற்றியிருக்கவேண்டும். உயர்நீதி மன்றம் அல்லது உயர்நீதி மன்றங்களில் 10 ஆ ண் டு க ள் தொடர்ந்து வழக்கறிஞராக இருந்தி ருக்க வேண்டும்.