பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக அதிசயங்கள் தால் இவை உயிர் அணு (Cell) என அழைக்கப்படுகிறது. கற்கள் அடுக்கப்பட்டு கட்டிடம் உருவாக்கப் படுவது போன்று உயிரணுக்களால் அடுக்கப்பட்டு உடல் உருவாக்கப் பட்டுள்ளது. ஒரு சில உயிரணுக் களைத் தவிர மற்றவற்றை வெறுங் கண்ணால் காணமுடியாது.அவற்றை நுண்பெருக்காடி (மைக்ராஸ்கோப்) துணைகொண்டே காணமுடியும். உயிரணுக்கள் ஒரே விதமான வடி வையோ, அளவையோ கொண்டவை அன்று. ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த உயிரணுவும் ஒவ்வொரு வகையான உருவையும், அளவையும் கொண்டுள்ளன. மனித உடலைப் போன்றே விலங்குகளும் தாவரங்களும் உயிர ணுக்களைக் கொண்டே உருவாகி யுள்ளன. இவை இலட்சக்கணக்கான உயிரணுக்களைக் கொண்டவை களாகும்.புரோட்டோசோவா,அமீபா, ஆகியவைகளும் ஆல்காகிலாமிட மோனாஸ் என்ற தாவரமும் ஒரே உயிரணுவால் ஆகியவைகள் ஆகும். உடலின் ஒவ்வொரு பகுதியிலும் இடம்பெற்றுள்ள உயிரணுக்கள் ஒவ் வொரு வகையான பணியைச் செய் கின்றன. சான்றாக, கண்ணிலுள்ள உயிரணு பார்க்க உதவுகிறது. இரைப்பை உயிரணு உணவு செரிக்க உதவுகிறது. நரம்பு உயிரணு செய்தி யனுப்பச் சாதனமாகப் பயன்படுகின் றது. சிலவகை உயிரணுக்கள் பிராணவாயுவைக் கொண்டு செல்ல வும், சிலவகை நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும் பயன்படு கின்றன. ஆனால் ஒரே வகையான உயிரணுவைக் கொண்ட விலங்கு அல்லது தாவரத்தின் இத்தகைய பணிகளை இந்த ஒரே வகை உயிர ணுக்களே செய்கின்றன. 99 உலக அதிசயங்கள் பழம் பெரும் உலக அதிசயங்கள் ஏழு எனக் கூறப் படுகிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு அறிவியல் வளர்ச்சியோ இயந்திரவியல் நுட் பமோ போதிய அளவு வளர்ச்சி பெற் றிருக்கவில்லை. அந்தச் சூழ்நிலை யும் அதிசயிக்கத்தக்க ஏழு படைப்பு கள் மனிதனால் உருவாக்கப்பட்டுள் ளன. அவைகளாவன: 1. பிரமிடுகள்: இவை ஏழு அதிசயங் களில் மிகவும் காலத்தால் பிந்தியவை, சுமார் 4,500 ஆண்டுகட்கு முன்பு எகிப்தில் பாரோ மன்னர்களால் உரு வாக்கப்பட்டவைகளாகும். இன்றும் அழியாமல் இருப்பவை. இவை அக் கால எகிப்து மன்னர்களின் கல்லறை களாகும். 2. பாபிலோன் தொங்கும் பூங்காக் கள்: மேற்கு ஆசியாவில் யூப்ரட் டீஸ் ஆற்றங் கரையில் பாபி லோன் எனும் நகரம் இருந்தது. இது வரலாற்றுச் சிறப்புள்ள நகரம். நெபுக்கட்நெசர் எனும் மன்னர் தன் மனைவியின் மகிழ்ச்சிக்காக அழகான பெரும் மாளிகை ஒன்றைக் கட்டி னார். அதில் ஐந்து கூம்பு வடிவ மாடங்களை அமைத்தார். ஒவ்வொரு மாடமும் பெரும் பரப்பளவோடுகூடிய தாக அமைக்கப்பட்டிருந்தது. அப் பரப்பில் உலகெங்குமிருந்துகொண்டு வரப்பட்ட மரங்களும் மலர்ச் செடி களும் வளர்க்கப்பட்டன. இவ்வழகிய தோட்டம் ஆகாயத்தில் தொங்குவது போல் காணப்பட்டதால் இவை "தொங்கும் தோட்டங்கள்’ என்றே அழைக்கப்பட்டன. 3. ஜூபிடர் சிலை: இது கிரீசில் ஒலிம்பியா எனுமிடத்தில் பீடி யாஸ் என்ற திறமைமிகு சிற்பியால் மிகப் பெரும் வடிவில் உருவாக்கப்