பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் போர்கள் தன்னை ஒரு வல்லரசாக ஆக்கிக் கொள்ள ஆர்வம் கொண்டது. இதற் காக ஆஃப்ரிக்காவில் காலனி அமைப் பதற்கு முயற்சி மேற்கொண்டது. இதற்கு பிரிட்டனும், பிரான்சும் இட மளிக்கவில்லை. நாடு பிடிக்கும் தன் முயற்சிக்கு இடையூறாக இருந்த பிரிட்டனையும், பிரான்சையும் அடக்கி ஒடுக்க விரும்பிப் பெரும் படையைத் திரட்டியது. இதைக் கண்டு அச்சமடைந்த பிரிட்டனும், பிரான்சும் தங்கள் படைபலத்தைப் பெருக்கிக் கொள்ள முன்ைந்தன. இத்தகைய சூழ்நிலையில் 1914ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் நாளன்று ஆஸ்திரிய இளவரசரும், இளவ ரசியும் சர்பியாவைச் சேர்ந்த ஒரு வனால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இக்கொலைக்கு சர்பியா அரசாங்கத் தூண்டுதலே காரணம் எனக் கூறி ஆஸ்திரியா படையெடுத்தது. செர் பியா ரஷ்யாவின் துணையை நாடி யது. ஆஸ்திரியாவோடு ஜெர்மனி சேர்ந்து கொண்டது. ரஷ்யாவுடன் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இத் தாலி, சர்பியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா போன் ற நாடுகள் இணைந்து சர்பியாவுக்கு உதவ முன்வந்தன. இவை நேசநாடுகள் என அழைக்கப்பட்டன. ஆஸ்திரியா வுக்கு உதவ முன்வந்த ஜெர்மனி யின் தலைமையில் ஆஸ்திரியா, ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா முத லிய நாடுகள் அணி சேர்ந்தன. இவை அச்சு நாடுகள் என அழைக் கப்பட்டன. எந்த அணியிலும் சேராது பெல்ஜியம் நடு நிலமை வகித்தது. இதை விரும்பாத ஜெர்மனி பெல்ஜியத்தின் மீதுபடையெடுத்தது. இதனால் சினமடைந்த பிரிட்டன் ஜெர்மனி மீது படையெடுத்தது. இதன்பின் இரு அணி நாடுகளும் போரில் ஈடுபடலாயின. - 101 அனைத்து வல்லரசு நாடுகளும் இப்போரில் ஈடுபட்டதால் உலக மக்கள் தொகையில் 90 சதவிகிதம் பேர் பங்கு கொள்ள நேர்ந்தது. இப் போரில் விமானப் படையும் நீர்மூழ் கிக் கப்பல்களும் ராட்சதப் பீரங்கி களும் பங்கு கொண்டன. இதனால் கடும்சேதம் உலகெங்கும் ஏற்பட்டது. இறுதியில் 1918ஆம் ஆண்டு நவம் பர் 11இல் ஜெர்மனி தோற்றதன் மூலம் பிரிட்டன் தலைமையிலான நேச நாடுகள் வெற்றி பெற்றன. இவ் வாறு முதலாம் உலகப் போர் முடிவுற் றது. 1919 ஜூன் 28இல் ஏற்பட்ட வெர்சேல்ஸ் ஒப்பந்தப்படி ஜெர்மன் படை திரட்டும் உரிமையை இழந்த ததோடு நேச நாடுகளுக்கு நஷ்ட ஈடும் வழங்கவேண்டியதாயிற்று. முதல் உலகப்போரில் இரண்டு கோடி மக்கள் கொல்லப்பட்டனர். போரின் பின் விளைவால் ஏற்பட்ட கொடிய நோய்களால் இலட்சக்கணக் கான மக்கள் இறந்தனர். கணக்கற்ற பொருட்சேதம் ஏற்பட்டது. இனி உலகில் போர் ஏற்படாமல் அமைதி காக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாத் தாப்பினர் இடை யேயும் ஏற்பட்டது. அதன் விளை வாக சர்வதேச் சங்கம்' உருவானது. இரண்டாம் உலகப்போர்: 1988இல் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக ஹிட் லர் தன் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு யூதர்கள் முட்டுக் கட்டையாக இருப்பதாகக் கருதினார். எனவே அவர்களை அழித்துவிட எண்ணிக் கொன்று குவித்தார்.பலரை நாட்டை விட்டே விரட்டினார். வெர் சேல்ஸ் ஒப்பந்தப்படி நேச நாடு களுக்கு நஷ்டஈடு வழங்குவதை நிறுத்தினார். உலகை ஆளத் தகுதி யுள்ள உயர் குலத்தவர் ஜெர்மானி யரே என்ற உணர்வைத் தன். பேச்