பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சாற்றலால் ஜெர்மானியர்களிடையே பரப்பினார். ஜெர்மானியர்களைப் போர் வெறி கொள்ளச் செய்தார். இந்தச் சமயத்தில் ஜப்பான், சீன நாட்டின் பகுதியான மஞ்சூரியர் மீது படையெடுத்தது. அதேசமயத்தில் இத் தாலியின் சர்வாதிகாரி முஸோலினி எத்தியோப்பா மீது படையெடுத்து, அதைக் கைப்பற்றினார். இதையெல் லாம் கண்டிக்கவோ தடுத்து நிறுத் தவோ இயலாத நிலையில் சர்வதேச சங்கம் இருந்தது. இதைக் கண்ட ஹிட்லர் தன்னைத் தட்டிக் கேட்கும் சக்தி உலகில் எங்கும் இல்லை என்ற மமதையில் 1935ஆம் ஆண்டில் அல்பேன்யா,செக்கோஸ்லாவியாமீது படையெடுத்து அவைகளைக் கைப் பற்றினார். அடுத்து போலந்து மீது படையெடுத்தார். இதனைக் கண்டு வெகுண்ட பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது போர் தொடுத்தன. இதன் மூலம் இரண்டாவது உலகப் போர்த் தொடங்கியது. ஜெர்மனியைப் போலவே நாடு பிடிக்கும் வெறி கொண்ட இத்தாலி யும் ஜப்பானும் ஒன்றாக இணைந் தன. பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா, அமெரிக்கா நாடுகள் ஒன்றாக இணைந்து கொண்டன. இதனால் உலகம் முழுமையும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் இப்போரில் முழுப் பங்கேற்க நேர்ந்தது. ஐரோப்பிய நாடுகளை வென்ற ஜெர்மனி இறுதி யாக ரஷ்யா மீது படையெடுத்தது. ரஷ்யா முழு மூச்சுடன் ஜெர்மன் படையெடுப்பை எதிர்த்துப் போரிட்டு வென்றது. ரஷ்யா. பிரிட்டீஷ், அமெ ரிக்கப் படைகள் ஜெர்மனியைக் கைப் பற்றின. ஹிட்லரும் அவரைச் சேர்ந்த வர்களும் தற்கொலை செய்து கொண் டனர். உலகத்தமிழ் மாநாடுகள் ஜெர்மனிக்குத் துணை நின்ற ஜப் பானின் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டு வீசித் தாக்கி இரு நகர்களை யும் அழித்தது. தோல்வியடைந்த ஜப் பான் அமெரிக்காவிடம் சரணடைந் தது. இத்துடன் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. இரண்டாம்.உலகப்போரில் அணு குண்டு, கடற்கண்ணிகள் போன்ற கொடிய ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டன. இரண்டு கோடிக்கு மேற் பட்ட மக்கள் போரில் கொல்லப்பட்ட னர். பல இலட்சம் பேர் காயமுற்ற னர். அளவிலா பொருட்சேதம் ஏற் பட்டது. முதல் உலகப்போரின் விளைவாக சர்வதேசச்சங்கம் ஏற்பட்டதுபோன்று இரண்டாம் உலகப்போர் முடிவின் விளைவாக உலகில் அமைதியை நிலை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. * உலகத்தமிழ் மாங்ாடுகள்: த மிழ் வளர்ச்சிபற்றி உலகளாவிய முறை யில் கூடி ஆராய உருவாக்கப்பட்ட வைகளே உலகத் தமிழ் மாநாடுகள். 1964ஆம் ஆண்டில் புது தில்லி யில் நடைபெற்ற கீழ்த்திசை மொழி கள் மாநாட்டில் கலந்து கொண்ட தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு. வரதராசனார், ரீலங்கா வைச் சேர்ந்த தனிநாயக அடிகள் ஆகியோர் இணைந்து தமிழ் வளர்ச் சிக்கான உலக அமைப்பொன்றை உருவாக்கினர். உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் என்று பெயரிட்ட னர். இதன் முதல் மாநாடு மலேசியது அரசின் ஒத்துழைப்புடன் 1966ஆl ஆண்டில் கோலாலம்பூரில் நடை