பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிபொருட்கள் போன்றவை கிரகம்அல்லதுசூரியனை அணுகுவதுண்டு. குறிப்பிட்ட எல் லைக்கு மிேல் செல்லும்போது இவை சுக்கு நூற்ாகச் சிதறி உடைகின்றன. இவ்வாறு உடையும் பகுதிகள் சிதறி கீழிறங்குகின்றன. புவி யீ ர் ப் பின் காரணமாக பூமியை நோக்கிப் பாய் கின்றன. அப்போது அவை காற்றின் உராய்வினால் எரியும் நட்சத்திரங் களாகத் தோற்றமளிக்கின்றன. சில சமயம் அவை 4,000"பா. வெப்பத் தில் எரியும். பெரும்பாலான எரி நட் சத்திரங்கள் பூமியைத் தொடும் முன் னரே எரிந்து போய்விடும். ஆனால் சில பெரிய எரிநட்சத்திரங்கள் முழு மையும் எரியும் முன்னரே பூமியை அடைவதும் உண்டு. அவை எரிநட் சத்திரங்கள்’ என அழைக்கப்படும். எரிநட்சத்திரக் கற்கள் பார்ப்பதற் குக் கருமைத் தோற்றமுடையதாக இருக்கும். அது கல்லைப் போன்ற பொருளாகவோ அன்றி அல்லது உலோகக் கட்டி போன்றோ அல்லது இரண்டுங் கலந்த கலவைபோன்றோ தோன்றும். அதில் உள்ள உலோகப் பகுதியில் இரும்பு, நிக்கல், மக்னிஷி யம், குரோமியம் கலநிதிருக்கும். மித்த ஒளியோடு தரையை நோக்கி வரும் எரிநட்சத்திரக் கற்கள் காற்றினூடே வரும்போது காற்றலை கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. இதனால் இடி முழக்க ஓசை உண் டாவதுண்டு. பெரும்பாலான எரிநட் சத்திர கற்கள் பூமியை அணுகும் போது காற்றுத் தடையினால் மேலும் நுண்மையாக நொறுங்கி மணல் போன்று பூமி மீது படிகின்றன. சில சமயம் பொடிந்து போகாது பெரும் கற்களாக பூமியை வந்து சேர்வதும் உண்டு. சுமார் 50 டன் எடையுள்ள எரிநட்சத்திரக் கற்களும் பூமியை வந்த 111. எரிபொருட்கள்:வெப்பத்தைப் பெற பயன்படும் பொருள்கள் எரிபொருட் கள் ஆகும். ரயில் என்ஜின், கார் என்ஜின், கப்பல், விமான என்ஜின் கள் மற்றும் தொழிற்கூடங்களில் இடம் பெரும் எந்திரங்கள் இயங்க எரிசக்தி தேவை. இவற்றை திட, திரவ, வாயுப் பொருட்களாகப் பெறு கிறோம். திட எரி பொருட்களில் விறகு, மரக்கரி முதலியன அடங்கும். நிலக் கரியில் பழுப்பு நிலக்கரியும் உட்படும். திரவ எரிபொருட்களில் குறிப்பிடத் தக்கவை பெட்ரோலியம், ஆல்க ஹால் போன்றவைகளாகும்.இயற்கை வாயு ஒரு சிறந்த எரி பொருளாகும். நெடுநேரம் நீடித்து எரிந்து சக்தி தருபவையே சிறந்த எரிபொருள் ஆகும். நிலக்கரியும் பழுப்பு நிலக்கரியும் நீண்டநேரம் எரிந்து சக்தி தருவ தால், இவற்றை என்ஜின்களில் எரித்து, எரிசக்தி பெறுகிறார்கள். பழுப்பு நிலக்கரி அடுப்பு எரிக்கவும் பயன்படும். பெட்ரோலியம் பலவகையான எரி பொருட்களாகப் பயன்படுத்தப்படு கிறது. பெட்ரோல் எண்ணெய், டீசல் எண்ணெய், கச்சா எண்ணெய் எனப் பலவகைகளாகப் பயன்படுகிறது. பல நூறாயிரம் ஆண்டுகட்டு முன்பு பூமி யுள் புதையுண்டு மக்கிப்போன தாவ ரங்கள் உயிரினங்களிலிருந்து வடிந்து நிற்கும் திரவம் இது. இதனைத் தோண்டி குழாய் மூலம் தரைக்கு மேல் பெட்ரோலியக்கச்சாப் பொருளாகக் கொண்டுவந்து சுத்தி கரித்து எரிபொருளாகப் பயன்படுத்து கிறார்கள். శ్లీ பூமிக்குள்ளிருந்து தடைந்துள்ளதாகக் கூறப்படுகிற்து. காற்றுக் கலவுாமல் குழாய் மூலம்