பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பின் வண்ணத்துப் பூச்சி போன்று காட்சியளிக்கும். மலரில் ஐந்து இதழ் கள் இருக்கும். இதன் காய் நீளமாக இருக்கும். அகத்தி மரம் மென்மை யானது. அகத்திக் கீரையும் மலர்மொட்டும் காயும் சமைத்து உண்ணப்படும். கால்நடைகளுக்கும் கோழிக்கும் இது சிறந்த தீவனம் ஆகும். அகத்தியில் 68 வகை சத்துகள் இருப்பதாகச் சித்த மருத்துவம் கூறுகிறது. அகத்தி யிலிருந்து எடுத்த எண்ணெய் கண்ணுக்கு மிகுந்த குளிர்ச்சி தரக் கூடியது. அகத்தியின் பட்டையும் வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. அகத்தி மரத்திலிருந்து உரிக்கப்படும் நாரைக் கயிறாகத் திரித்துப் பயன் படுத்துவார்கள். தென்னாட்டில் மிளகு, வெற்றிலைக் கொடிகளைத் தாங்கி நிற்கும் வண்ணம் வளர்க்கப் படுகிறது. இதன் தாயகம் மலேசியா நாடாகும். அகத்தியர்: "அகத்தியம்’ எனும் தமிழ் இலக்கண நூலை எழுதியவர் அகத்தியர். இன்றுள்ள தமிழ் நூல்கள் அனைத் திலும் தொன்மையானது தொல் காப்பியம் என்பர். அந்தத் தொல் காப்பியத்திற்கும் முன்னர் தோன்றி யது அகத்தியம் எனக் கூறப்படு கிறது. எனவே, அகத்தியர், தொல் காப்பியருக்கு முன்னர் வாழ்ந்தவர் எனலாம். இவர் குறுகிய வடிவை உடையவர். இதனால் இவர் குட முனி என்றும் குட்டை முனி என்றும் அழைக்கப்படுகிறார். “அகத்தியர்' என்ற பெயரில் பலர் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கின்றனர். இவர் தெய்வ நிலையில் வைத்து வணங்கப்படு கிறார். அகநானூறு: சங்கப் பாடல்களுள் நானூறு அகத்திணைப் பாடல்கள் அகத்தியர்-அகநானூறு-அகமதபாத் கொண்ட தொகுதி. எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று.மற்ற ஏழு தொகை நூல்களையும்விட இது அளவில் பெரியது. இதன் பாடல்கள் பதின்மூன்று அடி முதல் முப்பத்தியொரு அடிகள் வரை உண்டு. மொத்தம் 144 புலவர் கள் பாடியுள்ளனர். இப்பாடல்கள் சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களைப் பற்றியும் மக் களைப் பற்றியும் கூறுகின்றன. அவர்கள் வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்களை விளக்குகின்றன. இப் பாடல்களைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடிகிழார் மகன் உருத்திர சன்மன் என்பவர் ஆவார், அகமதாபாத்: இது குஜராத் மாநிலத்தின் தலைநகராகும். சபர்மதி நதியின் கரையில் அமைந்துள்ளது, இந்நகர் கி.பி. 1411இல் அகமத் ஷா என்பவரால் அமைக்கப்பட்டது. இங் குள்ள ஜூம்மா மசூதி மிகவும் அழ கான பெரிய பள்ளிவாசலாகும். இதில் முன்னுறு அழகான தூண்கள் உள் ளன. இது முக்கியமான வணிக நக ராகவும் விளங்குகிறது. இங்கு ஏராள ԱՈՈ 6Ծ] நெசவாலைகள் உள்ளன. நேர்த்தியான கைத்தொழிலுக்கும் புகழ்பெற்ற நகராகும். அகராதி: ஒரு மொழியில் பல்லா யிரக்கணக்கான சொற்கள் உள்ளன. அச் சொற்கள் அனைத்தையும் ஒரு வர் தெரிந்திருக்க இயலாது. அச் சொற்களில் தேவையான சொல்லை யும், அச்சொல்லின் பொருளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவுவதே அகராதி. 'அ'கரத்தை முதலாகக் கொண்டுள்ளதால் அகர முதலி' என அழைக்கப்படுவதும் உண்டு. இதில் அகர வரிசைப்படி சொற்கள் தொகுக்கப்பட்டிருக்கும்.