பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Φfiστ வெளியே ஒட்டிக் கொண்டோ தமக்கு வேண்டிய உணவைப் பெற்றால் அவ்வுயிர் ஒட்டுண்ணி என்று அழைக்கப்படும். இத்தகைய ஒட் டுண்ணிகள் தாவரங்களிலும் விலங்கு களிலும் உண்டு. இவற்றுக்கு உணவு தரும் உயிர் ஆதார உயிர் என்று அழைக்கப்படும். ஒட்டுண்ணிகளில் பேன், உண்ணி போன்றவை விலங்குகளின் மீதும் நாடாப் புழு, கொக்கிப்புழு போன்ற வை விலங்குகளின் உடலின் உட் புறத்திலும் இருந்து கொண்டு உண வைப் பெறும். தாவரங்களின் மீது ஒட்டிவளரும் தாவரம் புல்லுருவி எனப்படும். இது ஆதார தாவரத்தின் சத்தை நீராக உறிஞ்சி எடுத்துக் கொண்டு வளரும். சந்தன மரவேர்கள் பிற மர வேர்க ளோடு இணைந்து அவற்றின் சத்தை உறிஞ்சி வாழ்வதால் அவையும் ஒட் டுண்ணி வகையைச் சேர்ந்ததாகவே கருதப்படுகிறது. பேன், உண்ணி, ஒற்றுப் பூச்சி, போன்றவை அடிக்கடி ஆதார உயிர் களை மாற்றிக் கொண்டே இருக்கும், ஆனால், நாடாப் புழு, கொக்கிப் புழு போன்றவை ஒரே ஆதார உயிரை வாழ்நாள் முழுவதும் பற்றிக் கொண்டே வாழும். ஒட்டுண்ணிகளும் புல்லுருவிகளும் சிறிய பெரிய உயிரினங்கள் எல்லா வற்றையும் பற்றிக் கொண்டு வாழும். ஒட்டுண்ணிகட்கு ஊசி போன்ற உறுப்புகள் அ ைம ந் து சத்தை உறிஞ்ச உதவுகின்றன. இவற்றிற்கு புற உறுப்புகளோ உணவுப் பாதை களோ பூரணமாக வளர்ச்சியடைந்த வைகளாக இல்லை. ஒரிசா: கிழக்கி ந் தியாவிலுள்ள ஓர் இந்திய மாநிலம். 1,55,860 ச.கி. 12; மீ. பரப்பளவுள்ள இம்மாநிலத்தின் மக்கள் தொகை இரண்டேகால் கோடி யாகும். இம் மாநில மக்கள் பேசும் மொழி ஒரியாவாகும். இம்மாநிலத் தின் தலைநகரம் புவனேசுவரம் ஆகும். இம்மாநிலத்தில் செழிப்பான சம வெளிகள் நிறைய உண்டு. இம்மாநி லத்தில் பாயும் நதி மகாநதி. அதன் குறுக்கே ஹிரணமுட் எனுமிடத்தில் ஒரிசா கட்டப்பட்டுள்ள அணையின் மூலம் இந்நிலங்கள் பாசன வசதி பெறுகின் றன. இவ்வணை உலகிலேயே நீள மான அணையுமாகும். சமவெளிகளில் நெல், கரும்பு, புகை யிலை, கோதுமை, சோளம், பருத்தி முதலியன பயிராகின்றன. ஒரிசாவில் காடுகள் அதிகம். இங்கே மூங்கில் கள் மிகுதியாக விளைகின்றன. இவற் றிலிருந்து காகிதக் கூழ் தயாரிக்கப் படுகிறது. இதைக் கொண்டு காகித உற்பத்தி செய்யப்படுகிறது. இரும்பு, நிலக்கரி, மாங்கனீஸ், சுண்ணாம்பு முதலிய தாதுப் பொருட்களும் இங்கு