பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகழி அகில்-அங்காடி அச்சொற்களுக்கு நேராகப் பொருள் விளக்கம் தரப்பட்டிருக்கும். தமிழில் அகராதிகள் தோன்று வதற்கு மூலமாக அமைந்தவை "நிகண்டுகள் ஆகும். நிகண்டு’ எனும் வடசொல்லிற்கு தொகுதி" என்பது பொருளாகும். நிகண்டு திவாகாரம்' என்பது தமிழில் வெளி வந்த முதல் நிகண்டு ஆகும்.அச்சகங் கள் இல்லாத அக்காலத்தில் எல்லா வற்றையும் மனப்பாடம் செய்ய வேண்டியதாக இருந்தது. அதற் கேற்ப எளிதாகஉருவாக்கப்பட்டவை களே நிகண்டுகள்’. நிகண்டு அடிப் படையில், முதல் தமிழ் அகராதி 1594இல் அகராதி நிகண்டு’ எனும் பெயரில் வெளிவந்தது. இதன் ஆசிரியர் சிதம்பர ரேவண சித்தர் என்பவராவார். பி. ற் க | ல த் தி ல் மேனாட்டு அகராதிகளைப் பின்பற்றி பாதிரிமார்கள் தமிழில் அகராதிகளை உருவாக்கினர். அகராதிகளில் பலவகை உண்டு. ஒரு மொழிச் சொல்லுக்கு -தே மொழியில் பொருள் விளக்கம் தருவது ஒருமொழி அகராதி ஆகும். ஒரு மொமிச் சொல்லுக்கு வேற்றுமொழி யில் பொருள் விளக்கம் தருவது இரு மொழி அகராதி ஆகும். இதுபோல பலமொழி அகராதிகளும் உண்டு. அகழி அகழி என்பது கோட்டைப் பாதுகாப்புக்கான நீர் அரண் ஆகும். கோட்டையைச் சுற்றி வெளிப்புறத் தில் மண்ணை அகழ்ந்தெடுத்து அகன்ற, ஆழமான பள்ளத்தை உரு வாக்குவார்கள். அதில் நீரை நிரப்பி முதலைபோன்ற கொடிய நீர்வாழ் உயிர்களைவிட்டு வளர்ப்பார்கள். எதிரிகள் இந்த அகழிகளை எளி தாகக் கடந்து கோட்டைக்குள் வர முடியாது. இதன்மூலம் கோட்டைக் குள் இருப்பவர்கள் பாதுகாக்கப்படு வார்கள். - 5 இத்தகைய அகழிகளை வேலூர்க் கோட்டை, தஞ்சாவூர்க் கோட்டை போன்ற கோட்டைகளைச் சுற்றி இன்றுங்கூட காணலாம். அகில்: இது சந்தன மரத்தைப் போல் மணம்தரும் மரமாகும். இதன் இலைகள் எப்போதும் பச்சையாகத் தோற்றமளிக்கும். இது 25 மீ. உயரம் வரை வளரும். இதன் இலைகள் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.இலைகள் நீண்டும் கூர்மை யாகவும் இருக்கும். மலர்கள் வெண் மையாக இருக்கும். இதன் கனிகள் முட்டையின் தலைகீழ் வடிவம் போன்று இருக்கும். பஞ்சுபோல் மென்மையாக இருக்கும். முதிர்ந்த அகில் மரத்திலிருந்து ஒரு வகைப் பிசின் வடியும். இது சந்தனத் தைப் போல் நறுமணம் உடைய தாகும். அகில் மரத்தைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, சாம்பிராணிக் குப் பதிலாக நறுமணப் புகை உண் டாக்குவார்கள். இம் மரத்துண்டு களைப் பொடியாக்கி, வெந்நீரில் கொதிக்க வைத்து நறுமண எண்ணெ யைப் பிரித்தெடுப்பார்கள். இம்மணம் மிகுந்த எண்ணெய் சந்தன எண் ணெய் போல் பயன்படும். அகில் மரம் வெண்மையாகவும் மென்மை யாகவும் இருப்பதால் இதிலிருந்து நகைப்பெட்டி, புத்தகங்களுக்கான மேலட்டைகள் தயாரிக்கப்படுகின் றன. அகில் எண்ணெய் நறுமணப் பொருளாக மட்டுமல்லாமல் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படு கிறது. அகில் மரத்துாள் துணிகளை யும் தோலையும் பூச்சிகளிடமிருந்து காக்கிறது. இதன் நார் காகிதம் தயா ரிக்கவும் பயன்படுகிறது. அங்காடி இது கடைத்தெருவைக் குறிக்கும் தமிழ்ச் சொல். கடையை யும் குறிக்கும். பண்டைக் காலத்தில்