பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பெரிய நதிகளில் இதுவும் ஒன்றாகும். இது இமயமலையில் உயரத்தில் உள்ள கங்கோத்ரி எனு மிடத்தில் உற்பத்தியாகிறது. அங் கிருந்து 2,490 கிலோமீட்டர் தூரம் ஓடி வங்காள குடாக்கடலில் கலக் கிறது. இப்பேராறு ஓடிவரும் வழி யில் யமுனை, கோமதி ஆறுகளுடன் பிரம்மபுத்திரா பேராறும் கலக்கிறது. கங்கை நதி பாயும் சமவெளிகள் மிகச் செழிப்பானவைகளாகும். கங்கை ஆற்றின் குறுக்கே ஆங் காங்கே அணைகள் கட்டி கால்வாய் மூலம் நீரைக் கொண்டு சென்று பாசனத்துக்கும் மின்சார உற்பத்திக் கும் பயன்படுத்துகின்றனர். கங்கை | سه சமவெளியில் ஒடும்போது படகுமூலம் போக்குவரத்து நடைபெறுகிறது. சில இடங்களில் சிறு கப்பல்களும், செல்கின்றன. கங்கையின் கிளை ஆறுகளில் ஒன்றான ஹக்ளி நதி மூலம் கல்கத்தா வரை சிறு கப்பல்கள் போக்குவரத்துப் பணி புரிகின்றன. கங்கை நதிக் கரையில் புனிதத் தலங்களான ஹரித்துவாரம், அலகா பாத், வாரணாசி (காசி)முதலானவை அமைந்துள்ளன. இந்துக்களுக்குக் கங்கை புனித நதியாகும். கட்டபொம்மன்: இவர் தமிழ் நாட் டின் மிகச்சிறந்த சுதந்திரப்போராட்ட வீரர். இவர் வீரபாண்டிய கட்ட பொம்மு என்று அழைக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாஞ்சாலக் குறிச்சி என்ற பகுதியை ஆண்டு வந்தவர். வெள் ள்ையர் ஆட்சிக்கு அடிபணிந்து கப்பம் செலுத்த மறுத்து சுதந்திர மன்னராக ஆட்சி செலுத்த முயன் றார். இதனை விரும்பாத ஆங்கில ஆட்சி போரிட்டு இவரை அடக்க கட்ட்பொம்மன் பெரும் முயற்சி, செய்தது. இவரை 4,120 மீட்டர் வெல்ல முடியாது என உணர்ந்த t .. - مننه. 攣。 --- \

  • .. 控
  • L:

ஆங்கில ஆட்சியினர் கலெக்டர் ஜாக்சனுடன் சமரசம் பேச அழைத்த னர். சமரசம் பேச வந்த கட்ட பொம்முவை நயவஞ்சகமாகக் கைது செய்ய முயன்றனர். ஆனால் தன் வீரத்தால் ஆங்கிலேயர்களை வெற்றி கொண்டு தப்பி வந்தார். அதன் பின் மிகுந்த கோபத் துடன் பானர்மன் எனும் தளபதி தலைமையில் ஆங்கிலப் படையினர் நவீன ஆயுதங்களுடன் பாஞ்சாலக் குறிச்சி கோட்டையை முற்றுகையிட் டுப் போரிட்டனர். பீரங்கி போன்ற சக்தி வாய்ந்த புதிய போர் ஆயுதங் களை வெள்ளையர் பயன்படுத்தினர். அங்கிருந்து தப்பிச் சென்ற கட்ட பொம்முவுக்கு தஞ்சம் தந்த புதுக் கோட்டை மன்னனே பணத்திற்காக நயவஞ்சகமாகப் பிடித்து ஆங்கிலேய ரிடம் ஒப்படைத்தான். கயத்தாறு எனுமிடத்தில் விசாரணை செய்து, புளிய மரத்தில் கட்டபொம்மனை தூக்கிலிட்டுக் கொன்றனர்.