பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I ES வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்க்டிக்கா, ஆகியவைகள் ஆகும். ஆசியாவும் ஐரோப்பாவும் ஒரே நிலப்பகுதியாக அமைந்திருப்பதால் அதை'யுரேசியா' என்று வழங்குவதும் உண்டு. கிரீன் லாந்தை எட்டாவது கண்டம் எனக் கூறுவாரும் உண்டு. இக்கண்டங் களில் மிகப் பெரியதாக அமைந்திருப் பது ஆசியாக் கண்டம் ஆகும். கண் டங்களிலேயே மிகச் சிறியது ஆஸ்தி ரேலியா கண்டமாகும். இன்று துண்டுபட்டுக் கிடக்கும் கண்டப் பகுதிகள் அனைத்தும் முன்பு ஒரு காலத்தில் ஒரே நிலப்பகுதியாக அமைந்திருந்தது. நா ள ைட வில் அவை பிளவுபட்டு வெவ்வேறு திக்கை நோக்கி நகர்ந்தன. ஆஸ்தி ரேலியாவும் அண்டார்க்டிக்காவும் தென்திசை நோக்கி நகர்ந்தன. அமெ ரிக்கா கண்டங்கள் மேற்கு நோக்கிச் சென்றன. இவ்வாறு நிலப்பகுதிகள் விலகிச் சென்று கண்டங்களாகின என்பதை முதன்முதலாகக் கண் டறிந்து கூறியவர் ஜெர்மன் விஞ் ஞானி வேக்னர் என்பவராவார். இவ ரது இக்கொள்கை வேக்னர் கொள் கை’ என அழைக்கப்படுகிறது. கண்ணாடி: நாம் முகம் பார்க்கவும் பார்வைக் குறைவைப் போக்கவும் ணை ாைடி கண்ணாடி அடிக்கடி உடைவது அதன் இயல்பு. தற்காலத்தில் உடை யாத கண்ணாடிகள் செய்யப்படுகின் சாய்ச்சப்பட்ட கண்ணாடிக் குழம்பு றன. கார், விமானம், பஸ் போன்ற வாகனங்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள் எளிதில் உடையாத வைக்ளாகும். கண்பார்வைக் கோளாறுகளைச் சரி செய்யவும் கண்ணாடிகளும் தொலை நோக்காடிகளும் நுண்பெருக்கிக் கண் ணாடிகளும் தனிவகையில் செய்யப் படுகின்றன. காமிராக்களுக்கான லென்சுகள், பரிசோதனைச் சோத னைக்குழாய்கள் கண்ணாடியிலிருந்து செய்யப்படுகின்றன. கண்ணாடி செய்யப் பயன்படும் கண்ணாடியைப் பயன்படுத்துகிறோம். மூலப்பொருள்களுடன் இரும்பு, நிக் தூய்மை செய்யப்பட்ட சுண்ணாம்புக் கல், சோடியம் கார்பனேட் என்று அழைக்கப்படும் சலவைச் சோடா ஆகியவற்றை ஒன்றாகக் கலப்பார்கள். அவற்றை பெரும் உலையில் வைத்து 1,500 வெப்பத்தில் காய்ச்சும்போது உருகிப் பாகாகும். அக்குழம்பை அச்சு களில் ஊற்றி வேண்டியவடிவங்களில் கண்ணாடி செய்வார்கள், வாயால் ஊதி வடிவமைப்பதும் உண்டு. கல், கோபால்ட் போன்ற தாதுப் பொருள்களும் சேர்ந்து வண்ணக் கண்ணாடிகள் பிரத்தியேகமாக செய்யப்படுகின்றன. சுமார் 4,000 ஆண்டுகட்கு முன்பே கண்ணாடி செய்யக் கற்றிருந்தார்கள். அப்போதெல்லாம் முகம் பார்க்கவும் வளையல்கள் செய்யவுமே கண்ணாடி கள் பயன்படுத்தப்பட்டன. இன்று