பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தில் பயணிகள் கப்பல்களும் நீர்மூழ்கி போன்ற போர்க் கப்பல்களில் சில வகைகளும் கட்டப்படுகின்றன. மகாராஷ்டிரத்திலுள்ள பம்பாய் மசா பயணியர் கப்பல் கோன் கப்பல் கட்டும் தளத்தில் போர்க் கப்பல்கள் உருவாக்கப்படு கின்றன. மேற்கு வங்க மாநிலம் கல்கத்தா கார்டன்ரீச் கப்பல் தொழிற் கூடத்தில் போர்க் கப்பல்கள் கட்டப் படுகின்றன. கரிகாலன்: முற்காலத்தில் தமிழ் நாட்டை சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் ஆண்டு வந் தனர். அவர்களுள் மிகச் சிறந்த சோழ மன்னனாக விளங்கியவர் கரி காற்பெருவளத்தான் ஆவார். சுருக்க மாக கரிகாலன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். இளம் வயதில் நெருப்பால் கால் கருகியதால் கரி காலன் என அழைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. சிறு வயதிலேயே சிறந்த வீரமும் உயர்ந்த நீதி உணர்வும் கொண்ட இவரது ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்காலம் என அழைக்கப்படு கிறது. இவரது ஆட்சியின்போது தமிழகத் தில் மட்டுமல்லாது கடல் கடந்த நாடு களிலும் தமிழரின் வாணிகம் செழித்து கருநாடகம் வளர்ந்தது. பாசன முறைகளைப் புதுப்பித்தார். காவிரியாற்றின் குறுக் கே கல்லணையைக் கட்டிப் பாசனத் திற்குப் பயன்படுத்தினார். இக்கல் லணை தமிழரின் அணைகட்டும் திற னுக்கு இன்றும் சான்றாக விளங்கி வருகிறது. இவர் தமிழ்ப் புலவர்களை ஆதரித் ததால் இலக்கிய வளமிகுந்த கால மாக இவர் ஆட்சிக் காலம் அமைந் தது. பொருநராற்றுப்படை, பட்டினப் பாலை போன்ற சங்க கால நூல்கள் இவர் பெருமையைப் புகழ்கின்றன. புறநானூற்றுப் பாடல்களும் இவரைப் பாராட்டுகின்றன. கருங்ாடகம்: விந்திய மலைக்குத் தெற்கே அமைந்துள்ள இந்திய மாநிலங்களுள் ஒன்றாகும். இது மேற்கே அரபிக் கடலையும் வடக்கே மகாரஷ்டிரத்தையும் கிழக்கே ஆந்தி ரத்தையும் தெற்கே தமிழ்நாடு, கேரள மாநிலங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ள மாநிலமாகும். இதன் மொத்தப் பரப்பளவு 1,91,770 ச. கி.மீ. மக்கள் தொகை 3,70,48,451 ஆகும். இம்மாநிலத்தின் ஆட்சி மொழி கன்னடம். . இம்மாநிலத்தின் மேற்குப் பகுதி யில் நீண்டு செல்லும் மேற்குத் தொடர்ச்சிமலை இம்மாநிலத்தின் நீர் வளத்திற்கு ஆதாரமாக உள்ளது. காவிரி, துங்கபத்திரை ஆறுகள் இம் மலையில் உற்பத்தியாகின்றன. இங் குள்ள ஜோக் அருவியும் சிவசமுத்திர அருவியும் புகழ்பெற்ற அருவிகளா கும். மலைச்சரிவுகளில் நீண்டு பரந்த காடுகள் உள்ளன. இவற்றில் சந்தன மரங்கள் விளைகின்றன. இக்காடு களில் யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமைகள் ஏராளம் உண்டு. இம்மலைச் சரிவுகளில் தேயிலை பயிராகிறது. சமவெளிப் பகுதி