பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 இவர் சிறிது காலம் அரசாங்கத்தில் பணிபுரிந்தார். பிறகு அதைவிட்டு விட்டார். மக்களுக்கு நல்லுபதேசம் செய்யலானார். மக்கள் ஒழுக்கமாக வாழ வழிகாட்டினார். இவரது அறி வுரைகள்மக்களுக்குமிகவும் பிடித்தன. இவரது அறிவுரை கேட்ட மக்கள் இவரைப் பின்பற்றினர். பலர் இவரது சீடர் ஆனார்கள். இவர் நாடறிந்த பெரும் ஞானியாக விளங்கி னார். இவர் ஊர் ஊராகச் சென்று உபதேசம் செய்தார். இவரது அறிவுக் கூர்மையைக்கண்ட அரசு, இவரை மாநில நீதிபதியாக நியமித்தது. விரைவிலேயே அமைச்ச ராகவும் நியமிக்கப்பட்டார். மக்களி டையே மண்டிக் கிடந்த பழமைப் போக்குகளை நீக்க முயன்றார். பல சீர்திருத்தங்களைச் செய்தார். இத னால் மக்களிடையே இவர் மிகுந்த செல்வாக்குப் பெற்றார். இவருக்குப் பெருகி வரும் புகழைக் கண்ட ஆட்சி யாளர்கள் இவர் மீது பொறாமை கொண்டனர். இதனால் தொல்லை கள் பல தந்தனர். இதனால் இவர் அமைச்சர் பதவியை விட்டு விலகி னார். மீண்டும் ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு அறிவுரைகள் கூறினார். மூட நம்பிக்கைகளை கண்மூடிப் பழக்க வழக்கங்களையும் விட்டு விடு மாறு மக்களைத் தூண்டினார். தங் களை ஈடேற்ற வந்த தத்துவ ஞானி யாக இவரை மக்கள் போற்றினர். சிறந்த சமூக வாழ்க்கைக்கும் உயர்ந்த அரசியல் வாழ்வுக்கும் வழிகாட்டி னார். எளிமையாக வாழ்ந்த இவர் தம் கருத்துகளையெல்லாம் இலக் கியமாக எழுதினார். இவரது கருத்து களும் கொள்கைகளும் கன்பூசியானி சம்’ என்ற பெயரில் இன்றும் அழைக் கப்படுகின்றன. கன்னியாகுமரி. நமது இந்தியா வின் தென்கோடி எல்லையாக கன்னியாகுமரி அமைந்திருப்பது கன்னியாகுமரி. இதனைக் குமரிமுனை என்றும் அழைப்பார்கள். வங்காள விரி குடாக் கடலும் இந்துமாக்கடலும் அரபிக்கடலும் இங்கே சந்திக்கின் றன. முக்கடல்களும் சந்திக்கும் குமரி முனை நீண்டகாலமாகவே புனிதத் தலமாக மக்களால் கருதப்பட்டு வரு "கிறது. இங்கே புனித நீராட நாடெங் கிலுமிருந்து மக்கள் வருகின்றனர். இங்கே உள்ள மாரியம்மன் கோயில் மிகப் பழமையான கோயில் ஆகும். இதில் காணப்படும் அழகான சிற்பங்கள் பார்ப்போர் மனதைக் கவரக்கூடியதாகும். இக்கோயிலின் சிறப்புகள் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட ரோம வரலாற்று நூல்களில் குறிப் பிடப்பட்டுள்ளது. குமரிமுனையில் அண்ணல் காந்தி யடிகளின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவு மாளிகை ஒன்று உள்ளது. அண்ணல் காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் எழுப்பப் பட்டுள்ள இந்நினைவு மண்டபம் இந்தியக் கலைச் சிறப்பைப் பிரதி பலிப்பதாகும். அண்ணலார் பிறந்த அக்டோபர் இரண்டாம் தேதியன்று கதிரவனின் முழுக் கதிரொளியும் இம் மண்டபத்தின்மீது படுமாறு அமைக் கப்பட்டுள்ளது தனிச் சிறப்பாகும். இம்மண்டபத்திற்கு தென்கிழக்கே கடல்நீரிடையே ஒரு பெரும் பாறை அமைந்துள்ளது. அதன்மீது விவேகா னந்தர் நினைவு மண்டபம் எழுப்பப் பட்டுள்ளது. முன்பு ஒரு சமயம் விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற உலகச் சமய மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லும்முன் இங்குதான் நீண்ட தியானத்தில் ஈடுபட்டிருந் தார். அந்நினைவாகவே இவ்வழகிய