பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர் பதனப் பெட்டி கிறது. இது உலகத்து மொழிகளில் எல்லாம் மொழி பெயர்க்கப்பட்டுள் ளது. தமிழிலும் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. குருநானக்: இந்தியாவில் பல் வேறு மதங்கள் உள்ளன. அவற்றுள் காலத்தால் பிந்திய மதம் சீக்கிய மத மாகும். இதனை நிறுவியவர் குரு நானக் என்பவராவார். 15ஆம் நூற் றாண்டில் உருவான இம் மதம் இந் திய மதங்களிலேயே இளைய மதம் ஆகும். இம் மதத்தை உருவாக்கிய பெரி யார் குருநானக் என்பவராவார். 1469 -ஆம் ஆண்டில் லாகூரைச் சேர்ந்த தன்வந்தி எனுமிடத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே இறை உணர்வு மிக்கவராக இருந்தார். இறைவன் மீது கொண்டபக்தியினால் அதே போன்ற உணர்வும் பக்தியும் கொண்ட சாதுக் கள்,பக்கிரிகளுடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்றார். இவரைக் குடும்ப வாழ்வில் ஈடுபடச் செய்ய இவர் குடும்பத்தினர் விரும்பினர். இதற்காக இவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இதனாலெல் லாம் இவர் மனம் மாறவில்லை. இவரது நெருங்கிய நண்பர்களில் மாதானா என்பவரும் ஒருவர். அவர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார் ந்தவர். நானக் இறையுணர்வு பொங்கப் பாடும் பாடல்களை இவர் இசைக் கருவி மூலம் வாசிப்பது வழக்கம். மனித குலத்துக்கு இறைவன் ஒரு வனே;இறைவன் எங்கும் உள்ளான். அவன் அருளை வீண் சடங்குகள் மூலம் பெற இயலாது. அவன் ப்ெரு மையை அருள் திறத்தைப் புகழ்ந்து பாடுவதன் மூலமே பெற முடியும். மனிதர்களிடையே காணப்படும் சாதி, சமய வேறுபாடுகள் பொருளற்றவை. 147 வேண்டியவை பரப்பி அவை களையப்பட என்பதை மக்களிடையே வந்தார். இவரது சமயக் கருத்துகளுக்கு உரமூட்டியவர் கபீர்தாஸ் எனும் சமய ஞானி ஆவார். அவரை நானக் தன் குருவாகக் கொண்டார். இரு வரும் பாடிய இறைநெறிப்பாடல்களே “ஆதி கிரந்தம்' எனும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. இதுவே சீக்கியர்களின் வேத நூல் ஆகும். இதைச்சீக்கியர் ஒவ்வொருவரும் ஒவ் வொரு நாளும் ஒதுவர். சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், முதல் சீக்கிய குருவாகப் போற்றி வணங்கப் படுகிறார். குளிர் பதனப் பெட்டி கோடை காலத்தில் பித்தளைக் குடத்திலிருக் கும் நீரைவிட மண்பானையில் இருக் கும் நீர் குளிர்ச்சியாக இருக்கும். இதற்குக் காரணம் மண்பானையில் நம் கண்ணுக்குத் தெரியாத நுண் துளைகள் ஏராளமாக உண்டு. பானை நீர் இந் நுண்துளை மூலம் கசிந்து வெளிவரும்போது ஆவியா கிறது. அவ்வாறு ஆவியாவதற்கு வேண்டிய வெப்பத்தைப் பானையி லிருந்து எடுத்துக் கொள்வதால் பானையும் பானை நீரும் வெப்பமில் லாது குளிர்ச்சியாய் இருக்கின்றன. இதே வழி முறைப்படி அமைந் திருக்கும் நவீன சாதனமே குளிர் பதனப் பெட்டி. மின் விசையால் இயங்கும் இப்பெட்டியின் மேற் பகுதியில் ஒரு சுருள் குழாய் உண்டு. எளிதில் ஆவியாகக் கூடிய திரவம் அக்குழாய் வழியே செல்லும். ஆவியா வதற்கு குளிர்ப்பதனப் பெட்டிக்குள் இருக்கும் பொருள்களிலிருந்து வெப் பத்தை எடுத்துக் கொள்கிறது. இத னால் அப்பொருள்கள் குளிர்ச்சி