பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்வதேச சங்கம் சமண மதம் ஆரம்பத்தில் வட இந் தியாவில் மட்டுமே பரவி இருந்தது. சந்திரகுப்தன் காலத்திற்குப் பின் னரே தென் இந்தியாவில் பரவியது. தமிழகத்தில் வாழ்ந்த சமணர்கள் தமிழ் இலக்கணத்திற்கும் பெருந் தொண்டு ஆற்றியுள்ளனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உட்பட தென்னக மன்னர்கள் பலரும் சமணர் களை ஆதரித்தனர். ஏழாம் நூற் றாண்டுக்குப் பிறகு சமண மதத்தைப் பின்பற்றுவோர் தொகை குறையலா யிற்று. இந்தியாவிலேயே மொத்தம் 20 இலட்சம் சமணர்கள் இருப்ப தாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சமணர்கள் தமிழகத்தில் இலக்கிய, இலக்கணத்தோடு கலைத் தொண்டும் ஆற்றியுள்ளனர். இவர்களால் செதுக் கப்பட்ட சிற்பங்கள் காஞ்சீபுரம், சித் தன்ன வாசல், மதுரை, திருநெல் வேலி போன்ற இடங்களில் இன்றும் காணப்படுகின்றன. இவை காலத் தால் அழிக்க முடியாத புகழை பறை சாற்றிக் கொண்டுள்ளன. சமஸ்கிருதம்: இந்திய மொழி களில் தமிழைப் போல் பழமையும் சிறப்பும் உள்ள மொழியாக விளங்கு வது சமஸ்கிருத மொழியாகும். சமஸ் கிருதம் என்பதற்குச் செம்மையாகச் செய்யப்பட்டது என்பது பொருளா கும். ஆயினும் அது இலக்கிய எழுத்து மொழியாக உள்ளதே தவிர பேச்சு மொழியாக இயங்கவில்லை. சமஸ்கிருதம் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். ஆங்கிலம்,இலத்தீன், கிரேக்கம், ஜெர் மன் போன்ற ஐரோப்பிய மொழிகள் பலவற்றிற்கும் இ த ற்கு ம் ஒலி அமைப்பிலும் இலக்கண முறைகளி லும் நிறைய ஒற்றுமை காணப்படு கிறது, சமஸ்கிருதத்தில் ரிக், சாம, 158 யஜுர், அதர்வண வேதங்கள் இருப் பதால் இதை வேதமொழி என்று அழைக்கிறார்கள். இந்தியப் பெருங்காப்பியங்களான வியாசரின் மகாபாரதமும், வால்மீகி யின் இராமாயணமும் சமஸ்கிருதத்தி லேயே உள்ளன. பாணினியின் சமஸ்கிருத இலக்கண நூல் புகழ் பெற்றதாகும். காளிதாசர் எழுதிய ‘சாகுந்தலம் நாடகமும் சமஸ்கிரு தத்திலேயே உள்ளது. சமஸ்கிருதத்தில் பலநூறு பழைய இலக்கியங்கள் இருப்பதோடு வான வியல்,கணிதம்,சிற்பம்,ஒவியம், இசை போன்ற பல்வேறு துறைகளைப் பற் றிய நூல்களும் உள்ளன. இந்திய மொழிகள் அனைத்திலும் சமஸ்கிரு தத்தின் செல்வாக்குப் படிந்து உள் ளது. சர்வதேச சங்கம்: முதல் உலகப் போர் முடிந்த பின்னர் நாடுகள் ஒன் றிணைந்து வாழ வேண்டியதன் அவ சியத்தை உணர்ந்தன. இதற்காக 1919ஆம் ஆண்டில் ஃபிரான்ஸ் நாட் டில் உள்ள வார்சேல்ஸ் என்னுமிடத் தில் ஒரு சமாதான உடன்படிக்கை பல்வேறு நாடுகளுக்கிடையே ஏற்பட் டது. அதன்படி சர்வதேச சங்கம் என்ற அமைப்பை உருவாக்க ஏற் பாடாகியது. இதன்படி 1920ஆம் ஆண்டு சுவிட் சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் சர்வதேச சங்கம் உருவாக்கப்பட்டது. முதலில் இதில் 48 நாடுகள் சேர்ந்தி ருந்த போதிலும் விரைவிலேயே 60 நாடுகள் உறுப்பு நாடுகளாயின. இச் சங்கத்தின் முக்கிய குறிக் கோள் நாடுகளுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளையும் பிணக்கு களையும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.