பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 அதன்படி 1925இல் பல்கேரிய நாடு கிரீஸ் மீது படையெடுத்தது. இச்சங் கம் மேற்கொண்ட சமரசப் பேச்சு வார்த்தை மூலம் போர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கு முன்ன தாக அல்போனியாவுக்கும், யுகோஸ் லாவியாவிற்கும் இடையே ஏற்பட இருந்த போர் அபாயம் இச் சங்க முயற்சியால் தவிர்க்கப்பட்டது. இச் சங்கத்தின் மற்றொரு முக்கிய உறுப்பான சர்வதேச நீதி மன்றம் நாடுகளுக்கிடையேயான சச்சரவு களைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள உதவியது. நாளடைவில் பல நாடுகள் இச் சங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அடங் காமல் நடக்கத் தொடங்கின. இதன் விளைவாக 1989ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் மூளவேண் டியதாயிற்று. பயனற்றதாக்கப்பட்டு விட்ட இச் சங்கம் 1946ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் நாள் கலைக்கப் பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலக நாடுகள் அனைத்தும் ஒருங் கிணைந்த அமைப்பாக உலக சமாதா னத்தை நிலைநிறுத்த உருவான சர்வ தேச அமைப்பு தான் ஐக்கிய நாடுகள் சபை ஆகும். - சாக்ரட்டீஸ் இவர் உலகப் புகழ் பெற்ற கிரேக்கத் தத்துவஞானி ஆவார். இவர் கி.மு. 470இல் கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்சில் பிறந்தார். இவர் தந்தை ஒரு சிற்பி. இளம் வயதில் இவரும் தந்தையோடு சேர்ந்து சிற்பத் தொழில் செய்தார். இளம் வயது முதலே சாக்ரட்டீஸ் படிப்பில் பேரார்வம் கொண்டார். கிடைத்த நூல்களையெல்லாம் படித் சாக்ரட்டிஸ் தார். படித்தவைகளைப்பற்றி மீண் டும் மீண்டும் சிந்தித்தார். இதனால் இவருக்கும் சிந்திக்கும் ஆற்றல் வளர்ந்தது. ஆன்மிகம் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் மக்களுக்குப் புதிய முறையில் அறவுரை புகட்டினார். 'உன்னையே நீ அறிந்து கொள்: என ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டினார். மற்றவர்களைச் சிந்திக் கத் தூண்டுவதையும் உண்மைகளை உணர்ந்து வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடிக்கத் தூண்டுவதையுமே தம் பணியாகக் கொண்டார். மனிதன் நல்லவனாகவே பிறக்கி றான், அவனிடம் படியும் தீய குணமே அவனைத் தீயவனாக்கு கிறது. தீயகுணம் படிவதற்கு அறி யாமையே காரணம். மனிதனை நல்லவனாக்குவது அவன் பெறும் அறிவைப் பொருத்தது. உயர்ந்த குணத்தை ஊட்டி வளர்ப்பது அவன் பெறும் நல்லறிவே ஆகும் என்பன அவர் போதனையின் சாரம் ஆகும். மாபெரும் தத்துவ ஞானியாக விளங்கி மக்களிடையே அறிவுப் பிரச் சாரம் செய்து வந்தார். இதனால் இளைஞர்கள் இவர் போதனைகளை ஆர்வத்துடன் கேட்கலாயினர். இத னால் சமுதாயத்தின் கோணல் நிலை மைகளை உணரலாயினர். மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிராகச் சிந் திக்க முனைந்தனர். இதைக் கண்ட அரசு இளைய சமுதாயத்தினரி டையே புரட்சி உணர்வுகளை ஊட்டி அவர்களைக் கெடுப்பதாகக் கருதி யது. சாக்ரட்டீஸ் மீது வழக்குத் தொடர்ந்தது. மரண தண்டனை வழங்கியது. அவருக்கு அந்நாளைய வழக்கப்படி சிறையில் நஞ்சு தந்து மரண தண்டனையை நிறைவேற்ற லாயினர்.