பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம், வ. உ. தன் நாட்டுச் சட்டப்படியான தீர்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் சிறையில் தன் நண்பர் களுடன் தத்துவக் கருத்துகளைப் பரி மாறிக் கொண்டே நஞ்சு உண்டு உயிர் துறந்தார். சாக்ரட்டீசின் வாழ்க்கையைப்பற்றி யும் அவர் போதித்த கருத்துகளைப் பற்றியும் அவரது சீடர் பிளேட்டோ ஒர் அரிய நூலை எழுதி அளித்துள் 6s了s。 சிதம்பரம், வ. உ. செக்கிழுத்த சிதம்பரனார்' எனப் போற்றப்படும் வ. உ. சி. தீரம்மிக்க விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டத் தில் உள்ள ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் 1872ஆம் ஆண்டு செப்டம்பர் வ. உ. சிதம்பரனார் மாதம் 5ஆம் தேதி பிறந்தார். இவர் தன் தந்தையைப் போன்றே வழக் கறிஞர் ஆனார். திறமையாக வாதா டும் இவர், ஒரு வழக்கில் தன் தந்தை யை எதிர்த்தே வாதாடி வெற்றி பெற்றார். 155 விடுதலைப் போராட்டத்தில் பேரார் வத்தோடு பங்கு கொண்டார். தமிழ் நாடெங்கும் சென்று விடுதலை வேட் கையை ஊட்டினார். அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியும், சுப்பிர மணிய சிவாவும் இவரது உற்ற நண்பர்கள். அப்போது தூத்துக்குடி துறைமுகத் தொழிலாளர் தலைவராகவும் இருந் தார். வெள்ளையர்களின் ஆதிக்கத் தில் இருந்த தூத்துக்குடி துறைமுகத் தில் இந்திய வணிகர்கள் இழிவாக நடத்தப்பட்டனர். இதைக் கண்டு வெகுண்ட வ. உ. சி. வெள்ளையர் களின் அதிகார ஆதிக்கத்தை ஒடுக்க எண்ணினார். அதன் விளைவாக சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றை உருவாக்கினார். இதனால் இவர் 'கப்பலோட்டிய தமிழன்’ எனப் போற்றப்பட்டார். அக்கப்பலில் இந் திய வணிகர்கட்கு மட்டுமே இடமளித் தார். இதைக் கண்டு வெள்ளையர் கள் கடுங்கோபம் கொண்டனர். அவர் களது அதிகார ஆதிக்கத்திற்கு முன் ஈடு கொடுக்க முடியாமல் சுதேசிக் கப்பல் கம்பெனி நாளடைவில் நலிந் தது. விரைவிலேயே சுதேசிக் கப்பல் கம்பெனி மூடும்படியாயிற்று. ஒரு சமயம் பொதுக் கூட்டமொன் றில் வ. உ. சிதம்பரனார் அரசை எதிர்த்து விடுதலை முழக்கமிட்டார். 'அரசு நிந்தனை செய்ததாக இவர் மீது அரசாங்கம் வழக்குத் தொடுத் தது. சிறையில் அடைத்தது. சிறை யில் செக்கிழுத்துத் துன்புற்றார். நீண்ட சிறை வாழ்வுக்குப்பின் விடு சிதம்பரனார் . سه . له Libp(ه) 6p60 ستم வறுமையில் வாடினார். வ. உ. சி. சிறந்த தேசப்பக்தராக விளங்கியது போன்றே உயர்ந்த