பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்ண மண்டலம் சிறிதாகச் செல்லும் களிமண் மீது வெப்பக் காற்று செலுத்தப்படும். சுமார் 1,400 வெப்பத்தில் பல்வேறு இரசாயன மாறுதல்களைப் பெற்று பச்சைநிறக் கட்டிகளாக வெளிப்படும். இதனைக் குளிர்வித்து இதனுடன் ஜிப்சத்தைச் சேர்த்து அரைப்பார்கள். இப்போது மாவாக வெளிவருவதே சிமென்ட் ஆகும். சிமென்டுடன் குறிப்பிட்ட அள வில் மணலையும், நீரையும் கலந்து சுவர் எழுப்பவும், பூசவும் பயன்படுத் துவார்கள். சிமென்ட், கல், மணல் இவை குறிப்பிட்ட அளவில் நீர்விட் டுக் கலந்தால் அது கான்கிரீட் ஆகும். சிறுநீர் மண்டலம்: உடல் உறுப்பு களில் குறிப்பிடத்தக்க மாற்றொரு உறுப்பு சிறுநீரகம் ஆகும். இது 'சிறுநீர்ப் புறக்குழாய் சிறுநீர் மண்டலம் தொடர்பான பகுதி 'சிறுநீர் மண்ட லம்'என அழைக்கப்படும். இதில் சிறு நீரகங்கள், சிறுநீர்க்குழாய், சிறு நீர்ப் பை, சிறுநீர் வெளியேற்றும் குழாய் ஆகியன அடங்கும். 157 சாதாரணமாக நம் உடலில் பக்கத் துக்கு ஒன்றாக இரு சிறுநீரகங்கள் அமைந்துள்ளன. இவை மொச்சை வடிவில் முதுகெலும்பின் பக்கத்துக்கு ஒன்றாக இடுப்புப் பகுதியில் அமைந் துள்ளன. இவை சுமார் 10 செ.மீ. நீளம், 6 செ.மீ. அகலமும் 8 செ.மீ. கனமும் உள்ளவை. சிலர் ஒரு சிறுநீரகத்துடன் பிறப்பதும் உண்டு. ஒரு மனிதன் உயிர் வாழ ஒரு சிறு நீரகமே போதும். இரண்டில் ஒன்று கெட்டுவிட்டாலும் ஒரு சிறுநீரகத் துடன் உயிர் வாழ முடியும். இரண் டும் கெட்டுவிட்டால் ஒன்றைத் தான மாக பெற்றுஅறுவைச் சிகிச்சைமூலம் பொருத்தி உயிர்வாழ இயலும். சிறுநீரகம் ஒவ்வொன்றும் பல்லா யிரக்கணக்கான சின்னஞ்சிறு குழாய் களுடன் அமைந்துள்ளது. இக்குழாய் களை மெல்லிய இரத்த நாளங்கள், மூடிக் கொண்டுள்ளன. இரத்தத்தில் கலந்து வரும் கழிவுப்பொருள் ஆன சிறு நீரை மெல்லிய சிறுநீர்க்குழாய் கள் உறிஞ்சிக் கொள்கின்றன. இவ் வாறு நாளொன்றுக்கு சுமார் 1முதல் 1; லிட்டர்வரை சிறுநீரை எடுத்துக் கொள்கிறது. உறிஞ்சப்பட்ட சிறுநீர் 30 செ.மீ நீளமுள்ள குழாய் மூலம் அடிப்புறத்தில் அமைந்துள்ள சிறு நீர்ப்பையை வந்தடைகிறது. சவ்வுப் படலத்தால் உருவான 200 கன செ. மீ. உள்ள இச்சிறுநீர்ப் பை நிறைந்த வுடன், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. புறக்குழாயாக அமைந்துள்ள ஆண் குறி மூலம் சிறுநீர் வெளியேற்றப்படு கிறது. சிறுநீரில் சர்க்கரை அல்லது அல்ட மினோ கலந்திருந்தால் நோய் ஏற்பட் டிருப்பதாக கணிக்கப்படும். சீரண மண்டலம்: நம் உடலில் பல்வேறு உறுப்புகள் உள்ளன.