பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனா ہے۔ مٹی = தென்கிழக்குப் பகுதி செழிப்பான சமவெளியாகும். மக்கள் பெருக்கமும் இங்குதான் அதிகம், ஷாங்காய், கான் டன் போன்ற பெரும் நகரங்களும் இங்குதான் அமைந்துள்ளன. சீன நாட்டின் தலைநகரம் பெய்ஜிங் ஆகும். இது முன்னர் பீகிங் என்று அழைக்கப்பட்டது. சீன நாட்டின் விளைபொருள்களில் முக்கியமானது நெல், கோதுமை, சோளம், பருத்தி, புகையிலை, கரும்பு ஆகும். சீனாவில் கிடைக்கும் தாதுப் பொருள்களில் முக்கியமானது இரும் பும் நிலக்கரியுமாகும். இந்தியாவைப்போல் சீன நாடும் பழம்பெருமை வாய்ந்த நாடாகும். மூவாயிரம் ஆண்டுகட்கு முன் பிருந்தே இங்கு பட்டு நூல் தயாரிப் சின நெடுஞ்சுவர் புத் தொழில்நடந்து வருகிறது. காகிதத்தைக் கண்டுபிடித்ததும் அச். சுக் கலையை முதன் முதலில் கண்டு பிடித்ததும் சீனர்களேயாவர். 158, பகைவர்களின் படையெடுப்பி லிருந்து தங்கள் நாட்டைக் காக்க எல்லை முழுமையும் பெரும் சுவர் எழுப்பியள்ளார்கள். சுமார் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு இந்நெடுஞ்சுவர் கட்டப்பட்டது. இதன் நீளம் 2,400 கி.மீ. ஆகும். இன்றும் நல்ல நிலை மையில் உள்ள இச்சுவர் உலக அதி சயங்களில் ஒன்றாகக் கருதப்படு கிறது. சீனர்களின் கைவினைப் பொருட் கள் புகழ் பெற்றவையாகும். வெண் களிமண்ணால் எழில்மிகு பாண்டங் களைச் செய்வதில் கைதேர்ந்தவர் கள். சிற்பம், ஓவியம் முதலிய கலை களில் தேர்ந்தவர்கள் சீனர்கள். இந்தியாவிலிருந்து சென்ற புத்து டிதமே சீனாவிலும் முக் கிய மதமாக அமைந்தது. பலநூறு புத்தமதக்கோயில் களும் மடாலயங்களும் அங்குள்ளன. சீனாவில் வாழ்ந்த கன்பூசியஸ் என் பவரின் பெயரால் வழங் கும் மதம் இன்றும் சீனர் களில் சிலரால் பின்பற்றப் பட்டு வருகிறது. இருபதாம் நூற்றாண் டின் முற்பகுதி வரை மன் னர் ஆட்சியே அங்கு நில வியது. 1912இல் சன்யாட் சன் எனும் புரட்சித்தலை வர் முடியாட்சிக்கு முடிவு . கட்டினார். சீனநாட்டை ஒரு குடியரசாக்கினார். அதன் பின் சில குழப்பங்கள் ஏற்பட கம்யூனிச ஆட்சி ஏற்பட்டு இன்றுவரை நடந்து வருகிறது.