பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபாஸ் சந்திர போஸ் புதுச்சேரியில் வாழ்ந்தபோதுதான் பாரதியாரின் இலக்கியத் தொண்டு பெருக்கமடைந்தது. இங்குதான் இற வாப் பெரும் படைப்புகளான "பாஞ் சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயிற்பாட்டு போன்ற இலக்கியங் கள் உருவாயின. கனல் கக்கும் தேசி யப் பாடல்கள் பலவும் உருவாகின: அவை மக்களின் தேசியப் போராட்டி உணர்வுக்கு வேகமும் விறுவிறுப்பும் ஊட்டின. புதுச்சேரியில் பத்தாண்டு வாழ்க்கை யைக் கடத்திய பின்னர் சென்னை திரும்பினார். ஆங்கில அரசு அவரை, கைதுசெய்து சிறையில் அடைத்தது. அதே ஆண்டு விடுதலை பெற்றுக் கடையம் சென்றார். ஓரிரு ஆண்டு, கள் கழிந்த பின்னர் மீண்டும் சென்னை வந்து 'சுதேசமித்திரன்’ இதழில் பணியாற்றினார். இறை பக்திமிக்க பாரதியார் திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சென்று திரும்பும்போது வாசலில் நின்ற கோயில் யானைக்குப் பழம் வழங்கினார். அது தன் துதிக்கையால் இவரைக் கீழே தள்ளியது. வறுமை யின் காரணமாக உடல்தளர்ந்திருந்த பாரதியால் இத்தாக்குதலை தாங்க இயலவில்லை. அதன் பின் அவர் உடல்நலம் குன்றியது. அவர் 1921 செப்டம்பர் 11இல் காலமானார். எளிய சொற்களால் புனையப்பட்ட இவரது கவிதைகள் ஆழ்ந்த சிந் தனை வளமும் கற்பனைத் திற னும் மிக்கவை. இவரது பாடல்கள் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இறைப் பற்று ஊட்டுவனவாகும். இவரது கவி தைகள் புதுமையான கருத்துகளை யும் உணர்வையும் படிப்போரிடையே ஏற்படுத்துவனவாகும். 181 சுபாஸ் சந்திர போஸ், இந்திய விடுதலைக்காக இன்னுயிர் தந்த மாபெருந் தலைவர் சுபாஸ் சந்திர போஸ் ஆவார். இவர் நேதாஜி” என்றும் மக்களால் மதிப்போடு پجن{ சுபாஸ் சத்திர jಗ್ಗ அழைக்கப்பட்டார். இதற்குத் தலை வர்' என்று பொருள். - ** இவர் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23இல் வங்காளத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே சமயப் பற்று மிக்கவராக வேத நூல்களைப் படித் தார். அதன் விளைவாக சிறிது காலம் துறவியாக வாழ்ந்தார். பின்னர் துறவு வாழ்வை விட்டு நீங்கி லண்டன் சென்று கல்லூரியில் சேர்ந்து படித் தார். அக்காலத்தில் மிகப் பெரிய படிப்பாகக் கருதப்பட்ட ஐ.சி.எஸ். தேர்வில் சிறப்பாகத் தேறினார். உயர் பதவி பெற்றபோதிலும் 1921 இல் அப்பதவிய்ை விட்டு விலகினார். அதன் பின் இந்திய விடுதலைக் காக அண்ணல் காந்தியடிகள் நடத்