பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாப்போடு கூடிய அரண்மனை யாக இதைப் பயன்படுத்தி வந்தார். இங்குள்ள முத்து மஸ்ஜித் எனும் அழகிய சலவைக்கல் பள்ளிவாசலை ஒளரங்கசீப் மன்னர் கட்டினார். இங்கு ஷாஜஹான் மனைவி மும் தாஜ் பெயரில் அமைந்துள்ள மும் தாஜ் மஹால்' எனும் கட்டிடம் வனப்பு மிக்கதாகும். தற்போது இதில் மொகலாயர் காலநினைவுச் சின்னங் கள் பலவும் வைத்துக் காப்பா ற்றப் பட்டு வருகின்றன. மற்றொரு அழகிய கட்டிடப் பகுதி ரங்கு மஹால்' என்ப தாகும். இங்கு ஷாஜஹானால் கட்டப்பட்ட கொலுமண்டப மேடை புகழ்பெற்ற தாகும். சலவைக் கற்களால் கட்டப் பட்ட இம்மேடையில் தான் புகழ் பெற்ற மயிலாசனம் இருந்தது. இங்கே பதிக்கப்பட்டிருந்த நவமணி களையும் மயிலாசனத்தையும் படை யெடுப்பாளர்கள் கைப் பற்றி க் கொண்டு சென்றுவிட்டனர். - இச் செங்கோட்டை மேடை மீது நம் நாட்டுத் தேசியக் கொடியை விடு தலை தினத்தன்று ஏற்றிவைத்துப் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவது வழக்கமாகும். செஞ்சிலுவைச் சங்கம்: போரின் போதும் புயல், வெள்ளம், பூகம்பம் .ே பா ன் ற வை ஏற்படும்போதும் பாதிக்கப்பட்டவர்களைக் கா க் க அமைந்துள்ள அமைப்பு செஞ்சிலு வைச் சங்கம் ஆகும். சாதாரண காலத்தில் மக்கள் சுகாதாரத்தைப் பேண் உதவுகிறது. மருத்துவ வசதி களை அளிக்கிறது. செஞ்சிலுவைச் சங்கத்தை முதன் முதலில் உருவாக்கியவர் ஹென்றி 168 டுனான்ட் என்பவர் ஆவர். இவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வர். 1859ஆம் ஆண்டில் பிரான்சுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையே நடந்த போரில் பல வீரர்கள் காயம்பட்டனர். அவர்கள் தகுந்த மருத்துவ உதவி இல்லாமல் இறந்தனர். இப்பரிதாப நிலை கண்டு வருந்திய ஹென்றி டுனான்ட் வேறு சில நண்பர்களை துணைக்கழைத்து காயம்பட்ட வீரர் களுக்கு மருத்துவ உதவி செய்து காப்பாற்றினார். நடந்த இந்தச் சம்பவத்தை விவரித் தும், இவ்வாறு போரில் பாதிக்கப்படு வோருக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் ஒரு நூல் எழுதினார். இவரது கருத்தையும் விவரித்த திட்டத்தையும் சுவிட்சர் லாந்து அரசாங்கம் பாராட்டியது. 1864ஆம் ஆண்டில் இத்தகைய அமைப்பை உருவாக்க ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டியது. மாநாட்டின் இறுதியில் இப்படி ஒர் அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பே செஞ்சிலுவைச் சங்கம். இதன் கிளைகள் உலக நாடுகள் அனைத்திலும் ஏற்படுத்தப்பட்டுள் ளன. இந்தியாவின் இதன் கிளை 1920ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. வெள்ளைநிறக் கொடியின் நடுவே சிவப்பு நிறச் சிலுவை பொறிக்கப்பட் டிருக்கும். இஸ்லாமிய நாடுகளில் பலவற்றில் சிலுவைக்குப் பதிலாக பிறை பொறிக்கப்பட்டிருக்கும். அங்கு Q&thiosop& fffloth (Red crescent