பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 Society) என இவ்வமைப்பு அழைக் கப்படுகிறது. போரில் சிறைபிடிக்கப்பட்ட கைதி களின் நல ைன யும் இச்சங்கம் கவனித்து உதவுகிறது. செய்தித் தாள்: இக்காலத்தில் மிக முக்கிய செய்தித் தொடர்புச் சாதன மாக உலக மக்களிடையே விளங்கி வருவது செய்தித் தாள்களாகும். குறு கிய கால அளவிற்குள் உலகெங்கும் உள்ள முக்கியச் செய்திகளைத் தொகுத்துச் சுவையாக மக்களுக்குச் செய்தித் தாள்கள் தந்து வருகின்றன. இச்செய்திகள் அரசியல், அறிவியல், சமூக நிகழ்ச்சிகள் முதலாக அனைத் துத் துறைச் செய்திகளுமாகும். செய்திகளை முந்தித் தருவதில் செய்தி இதழ்களுக்கிடையே மிகுந்த போட்டி உண்டு. ஆனால் வார, இருவார, மாத இதழ்களுக்கிடையே இத்தகைய போட்டி குறைவாகும். உலகெங்கும் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிக் கொள்கை களை விளக்கவும், பரவவும் தனிச் செய்தி இதழ்களை நடத்தி வருகின் றன. - பதினாறாம் நூற்றாண்டில் அச்சுத் தொழில் தொடங்கிய பின்னரே செய்தி இதழ்கள் தோன்றின. இந்தி யாவில் முதல் செய்தித் தாள் 1780 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் வில் லியம் போல்ட் என்பவரால் தொடங் கப்பட்டது. அதன் இரண்டாவதாகச் செய்தித் தாள் தமிழ்நாட்டில் தொடங் கப்பட்டது. ரிச்சர்டு ஜான்ஸ்டைன் என்பவரின்சென்னையில் வார இத ழோன்றைத்தொடங்கினார். சுதந்திரப் போராட்டம் மாபெரும் எழுச்சியாக இந்தியா முழுவதும் செயற்கைக்கோள் நடந்தது. அப்போது சமுதாய விழிப் புணர்வை ஊட்டும் வகையில் ஆங் காங்கே இந்திய மொழிகளின் செய் தித் தாள்கள் தொடங்கப்பட்டன. விடுதலைப் போராட்டம் மக்களி டையே காட்டுத்தீபோல் பரவுவதற் குச் செய்தித் தாள்கள் பெரும் காரண மாக அமைந்தன. இன்று மக்களிடையே அறிவை வளர்க்கவும் அரசியல், பொருளா தாரப் பிரச்சினைகளை அலசி ஆரா யவும் செய்தித் தாள் பெருந்தொண்டு புரிகின்றன. நாட்டு மக்களிடையே மட்டுமல்லாது உலக மக்களிடையே நெருக்கத்தை உருவாக்கும் இணைப் புப் பாலமாகச் செய்தித் தாள்கள் விளங்குகின்றன. செயற்கைக் கோள்: சூரியனைச் சுற்றிவரும் பூமி, புதன், வியாழன், வெள்ளி, சனி, முதலிய கிரகங்கள் இயற்கைக் கோள்களாகும். இவை போன்று பூமியைச் சுற்றி வர மனித னால் விண்ணுக்கு அனுப்பப்படும் கோள்கள் செயற்கைக் கோள்கள் ஆகும். இச் செயற்கை கோள்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன. நீண்ட தூரம் விண்ணில் பாய்ந்து சென்று தனியே பூமியின் நீள்வட்டப் பாதையில் உலகத்தைச் சுற்றி வருகின்றன. இச் செயற்கைக் கோள் கருவியி னுள் அறிவியல் நுட்பக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை பூமியி லிருந்து தகவல்களைப் பெற்று அவற்றை மீண்டும் உலகின் பல் வேறு பகுதிகளுக்கு ஒலியாகவும் ஒளியாகவும் பரப்புகின்றன. அற்புத மான செய்தித் தொடர்புச் சாதனங் களாகச் செயற்கைக் கோள்கள் இன்று உலகினர்க்குப் பயன்பட்டு வருகின்றன.