பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சோவியத் ஒன்றியம் 16 தனித் தனிக் குடியரசுகள் இணைந்து ஒன் மாஸ்கோ நகரம் றிய நாடாகும். ஒவ்வொரு குடியரசி 'லும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் அக்குடியரசில் தாய்மொழி எதுவோ அதிலேயே கல்வி கற்கின்றனர். நீதி மன்ற மொழியும் தாய்மொழியேயா கும். நாட்டின் இணைப்பு மொழி யாக ரஷிய மொழி அமைந்துள்ளது. சோவியத் நாடு நிலவளம் மிக்க நாடாகும். எனவே, இங்கு வேளாண் மை சிறப்பாக நடைபெறுகிறது. இந் நாடு கனிம வளத்திலும் சிறந்து விளங்குவதால் பெரும் தொழிற் சாலைகள் நாடெங்கும் உள்ளன. மீன்பிடி தொழிலும் சிறப்பாக நடை பெறுகிறது. இந்நாட்டில் மலைகள், ஆறுகள், ஏரிகள் ஏராளமாக உள்ளன. வன வளமும் நிறைந்துள்ளது. வோல்கா போன்ற பேராறுகள் நீர் வழிப் போக்குவரத்துக்குப் பயன்படுகின் றன. சோவியத் நாட்டில் துறைமுகங் கள் பல உள்ளன. சோவியத் நாடு ஒரு சோசலிசக் குடி யரசாக அமைந்துள்ளதால் இங்குள்ள டெல்லி குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கட்டாயமாகக் கற்பிக்கப்படுகிறது. ஜார் எனும் கொடுங் கோல் மன்னர்களிட மிருந்து உழைக்கும் மக் கள் 1917இல் புரட்சி செய்துஆட்சியைக்கைப் பற்றினர். லெனின் என் பவரின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றிய ஆட்சி அறி வியல் வளர்ச்சியில் மா பெரும் வெற்றிகண்டது. இது உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. சோவியத் நாட்டின் ஆட்சியிலும் சமுதாய அமைப்பிலும் மாபெரும் மாற்றங்களை காலப்போக்கிற்கேற்ப ஏற்படுத்தி வருகிறார் கோர்ப்பச்சேவ். எனும் ரஷியத் தலைவர். டெல்லி இந்தியாவின் தலைநக ரம் டெல்லியாகும். டெல்லி நகரம் பழைய டெல்லி, புது டெல்லி என இரு பிரிவுகளைக் கொண்டதாகும். இந்தி யாவில் உள்ள பெரும் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். யமுனை ஆற்றங்கரையில் அமைந் துள்ள இந்நகரத்தை உருவாக்கியவர் ஷாஜஹான் என்னும் மொகலாய மன்னர். பழைய டெல்லியில் ஷாஜ ஹான் அரண்மனை செங்கோட்டை யினுள் அமைந்துள்ளது. கட்டிடச் சிறப்பும் கலை நுட்ப வேலைப்பாடும் கொண்ட இது உலகில் மிகச் சிறந்த கட்டிடங்களுள் ஒன்றாகும்.இங்குள்ள முத்து மகுதி புகழ்பெற்ற ஒன்றாகும். செங்கோட்டைக்கு அருகில் உள்ள ஜூம்மா மசூதி இந்தியாவில் உள்ள மசூதிகளிலேயே மிகப் பெரிய மசூதி