பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 இருவராக விளையாடினால் ஆடும் மைதானத்தின் அகலம் 11 மீட்டர் இருக்க வேண்டும். இவ்விளையாட்டு சர்வதேச அள வில் விம்பிள்டன் டென்னிஸ்போட்டி, டேவிஸ் கோப்பைப் போட்டி என இரு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. டென்னிஸ் விளையாட்டில் புகழ்பெற்ற நாடு களில் இந்தியாவும் ஒன்றாகும். டைபாய்டு: அடிக்கடி மக்களைப் பாதிக்கும் தொற்று நோய்களுள் ஒன்று டைபாய்டு. இது ஒருவகைக் காய்ச்சலாகும். இந்நோய் கண்ட வரின் குடல் அதிகமான பாதிப்புக் காளாகும். இதனால் இந்நோயைக் குடல் காய்ச்சல், எனக் கூறுவதும் உண்டு. இந்நோய் எளிதாக ஒரு வரிட்மிருந்து மற்றவர்க்குத் தொற்றிக் கொள்ளும் இயல்புடையது. இந்நோய் ஒருவகைக் கிருமிகளால் உண்டாகிறது. கெட்டுப் போன உணவு, பால், நீர் போன்றவை களால் இந்நோய் பரவுகிறது. குடல் வழிச் செல்லும் இந்நோய்க் கிருமிகள் சிறுகுடலில் உள்ள சுரப்பிகள் மூலம் இரத்தத்தில் எளிதாகக் கலந்து விடு கின்றன. இதன் மூலம் உடல் எங்கும் இந்நோய்க் கிருமிகளின் ஆதிக்கம் ஏற்படுகிறது. இந்நோய்க் கிருமிகள் உடலில் புகுந்த பதினைந்து நாட் களுக்குள் காய்ச்சல்,வயிற்றுப்போக்கு, தலைவலி, உடல்வலி, உடல் பல வீனம்,சோர்வு முதலியவை ஏற்பட்டு தொல்லை தரும். இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது குடல் தான். குடல் காய்ச்சலால் சில சமயம் குட ல்ெ துளை ஏற்படுவதும் உண்டு. வாய் புண்ணாகி விடும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக் கை வெகுவாகக் குறையும். சிலசமயம் டோக்கியோ மண்ணிரல் வீங்கி விடும். காய்ச்சல் குறைய பதினைந்து நாட்கள் பிடிக் கும். சில சமயம் மரணமும் ஏற்படுவ துண்டு. இந்நோய் வராமல் தடுக்க முன் னெச்சரிக்கை தேவை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் இந் நோய் வராமல் தடுக்கலாம். நாம் உண்ணும் உணவை நன்கு வேக வைத்து உண்ண வேண்டும். பருகும் நீர், பால் போன்றவைகளையும் நன்கு காய்ச்சியே பருகவேண்டும். நோய் அறிகுறி தென்பட்ட உட னேயே தகுந்த சிகிச்சையை மேற் கொண்டால் மேலும் நோய் வலு வடையாமல் தடுக்கலாம். டோக்கியோ! உலகின் மிக முக் கிய நகரங்களுள் டோக்கியோவும் ஒன்று. இது ஜப்பான் நாட்டின் தலைநகரம் ஆகும். இது சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் மிகப் பெரிய நகரமாகும். டோக்கியோ ஜப்பானின் தலைநக ராக ஆவதற்கு முன்பு சாதாரணமான சிறிய கிராமமாக இருந்தது. அப் போது அதற்குப் பெயர் யேடோ என்பதாகும். 1869ஆம் ஆண்டில் ஜப்பான் அரசர் அப்போதைய தலை நகரான கியோட்டோவிலிருந்து தலைநகரை யோடோ கிராமப் பகு திக்கு மாற்றினார். புதிய தலைநகரத் திற்கு டோக்கியோ’ எனப் பெயர் சூட்டினார். அது முதல் மிக விரைந்து வளர்ந்து இன்று உலகப் பெரும் நகர மாக உருவெடுத்துள்ளது. நகரின் நடுவில் அரசரின் அரண்மனை அமைந்துள்ளது. ஜப்பானிய கலை, பண்பாட்டு அடிப்படையில் உருவாகி வளர்ந்த