பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 இவ்வாறு வேண்டியஎழுத்துகளைத் தொடர்ந்து அழுத்தி அச்சுப் பதிவம் தயாரிக்க்ப் படுகிறது. எழுத்து களோடு எண் குறியீடுகளுக்கும் பொத்தான்கள் உண்டு. ஒவ்வொரு எழுத்தும் தாளில் பதிந்த பின்னர் தாள் தானாகவே இடப்புற மாக நகர்ந்து அடுத்த எழுத்துப் பதிய இடம் தரும். இவ்வாறு தொடர்ந்து நகர்வதால் வேண்டிய எழுத்துப் பொத்தானைத் தொடர்ந்து தட்டி எழுத்துகளைப் பதியச் செய்யலாம். ஒரு சொல் முடிந்தவுடன் அடுத்த சொல்லைப் பதிய பொத்தானுக்குக் கீழே உள்ள கட்டையைத் தட்டினால் சற்று நகர்ந்து இடைவெளி உண்டாக் கும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் தொடர்ந்து சொற்களையும் சொற்றொடர்களையும் தாளில் பதியச் செய்யலாம். ஒருவரி முடிந்தவுடன் மணி அடித்து எச்சரிக்கை செய்யும். மீண்டும் உருளையின் இறுதியி லுள்ள கைப்பிடியை அழுத்தி இழுத் தால் உருளை சுழன்று வலதுபுறம் வந்துவிடும். மீண்டும் அடுத்த வரி யைத் தொடர்ந்து தட்டச்சு செய்ய லாம். தட்டெழுத்துச் செய்ய முறையான பயிற்சி பெற்ற தட்டெழுத்துப் பொறி யாளர்கள் எழுத்துப் பொத்தான் களைப் பார்க்காமலேயே விரைந்து தட்டெழுத்துச் செய்வார்கள். தந்தி ஒர் இடத்திலிருந்து மற் றோர் இடத்திற்குச் செய்தியை விரைந்து அனுப்புவதற்குப்பயன்படும் சாதனம் தந்தியாகும். மின் காந்த சக் தியின் துணை கொண்டு இக் கருவி இயக்கப்படுகிறது. மோர்ஸ் எனும் அமெரிக்கர் 1887ஆம் ஆண்டில் தந்தி அனுப்ப உதவும் கருவியைக் தந்தி கண்டுபிடித்தார். கருவி என்று பெயர். இதற்கு மோர்ஸ் தந்திச் செய்தியை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் இரு முனைகளில் தனித்தனி அமைப்புகள் உள்ளன. மோர்ஸ் கருவிமூலம் அனுப்பும் செய்தியை மறு முனையில் இயங்கும் மோர்ஸ் ஒலிப்பான் என்ற கருவிமூலம் பெறலாம். தந்திக் கருவியின் அமைப் பைக் கவனிப்போம். மோர்ஸ் கருவியில் நேர் குத்து வச மாக இயங்கக்கூடிய நெம்புகோல் உண்டு. இதன் மேற்புறமாக உள்ள குமிழ் எபனைட் எனப்படும். இதனை விரலால்அழுத்திக்கீழாக உள்ள பித்த ளைக் குமிழைத் தொடும்படி செய்ய வேண்டும். இந்தக் குமிழ் மின் கலத் தில் உள்ள நேர் துருவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். மின் கலத் தொடர் எதிர்துருவம் பூமியுடன் இணைந்திருக்கும். .ெ ந ம்பு கோ ல் செய்தி பெறும் இடத்துடன் தந்திக் கம்பிமூலம் இணைக்கப்பட்டிருக்கும். Gioritsu eres தந்தி அனுப்பும் கருவி செய்தி பெறும் இடத்திலுள்ள மோர்ஸ் ஒலிப்பான் எனும் கருவியில்