பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மின்காந்தம் இருக்கும். மின்காந்தத் தின் மேற்புறத்தில் ஓர் இரும்புச் சட் டம் இருக்கும். இச்சட்டத்தின் ஒரு முனை மே ற் பகு தி யில் உள்ள இரண்டு பித்தளைத் திருகுகளுக்கு இடையே மேற்புறத்திருகைத் தொட்ட படி இருக்கும். மின்காந்தத்தில் சுற்றப் பட்டுள்ள கம்பிச்சுருளின் மற்றொரு முனை பூமியோடு இணைக்கப்பட் டிருக்கும் கம்பியுடன் இணைந்திருக் கும. இனி எவ்வாறு செய்தி அனுப்பப் படுகிறது என்பதைப் பார்ப்போம். செய்தி அனுப்பும் கருவியில் உள்ள எபனைடுக் குமிழ் அழுத்தப்பட்ட வுடன் மின்சாரம் பாய, செய்தி பெறும் இடத்திலுள்ள மின்காந்தம் காந்த சக்திபெறுகிறது. அக்காந்த சக்தி இரும்புச் சட்டத்தைக் கீழ் நோக்கி இழுக்கிறது. அதன் விளைவாக சட் டத்தின் ஒரு முனை கீழாகத் தாழ்ந்து திருகின் மீது மோதி ஒலிஎழுப்புகிறது. செய்தி அனுப்புபவர் குமிழை அழுத்து வதை விட்டுவிட்டால் மின்சாரம் பாய் வது நின்றுவிடும். இதனால் மின்காந் தம் தன் காந்த சக்தியை இழக்க ஒசை எழும்புவது நின்றுவிடும். இதனால் இரும்புச் சட்டம் மீண்டும் மேலே சென்று அங்குள்ள திருகின்மீது மோதி ஒலி எழுப்பும். இவ்வாறு மேலுள்ள சட்டத்தின் திருகு மேலும் கீழுமாக மாறி மாறி மோதி ஒலி எழுப் பும். இந்த ஒலிகளுக்கான குறியீடு களை மோர்ஸ் வகுத்துள்ளார். அவ் வொலிகளை எழுத்துகளாக மாற்றி செய்தி அனுப்பிப் பெறுவர். இக்காலத்தில் பல்வேறு வகையான தந்திமுறைகள் கண்டறியப்பட்டுள் ளன. வீட்ஸ்ட்டன் முறை, பாடட் முறை, கிரீடுமுறை எனப் பலவகை 178 உண்டு. டெலிபிரிண்டர் எனும் தொலை அச்சடிப்பு முறை உண்டு, தந்தி மூலம் படங்களையும் அனுப்ப கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்: தமிழர்களின் தாய்மொழி யாகிய தமிழ் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து வளமடைந்த மொழி யாகும். உலகில் உள்ள மிகப் பழைய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் கருதப் படுகிறது. தமிழ் நாட்டில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா, இந்தோனேசியா, கிழக்குதெற்கு ஆப்பிரிக்கா முதலான உல கின் பகுதிகளில் வாழும் பல இலட்சம் மக்கள் தமிழ் பேசுகின்றனர். உலகின் மிக மூத்த மொழிகளான இலத்தீன், சமஸ்கிருதம் போன்றவை வழக்கிழந்து விட்டன. அதே அளவு பழைமையுடைய த மி ழ் இன்றும் இலக்கிய, இலக்கண வளத்தோடு மக் களால் எழுத, பேசப்படும் மொழியாக ஆற்றலோடு விளங்குகிறது. இந்தியாவில் வழங்கிவரும் மொழி களை நான்கு முக்கியக் குடும்பங் களுள் அடக்குவர். அவை திராவிட மொழிகள்.இ ந்தோ-ஐரோப்பிய மொழி கள், ஆஸ்திரிய மொழிகள், திபேத் திய-சீன மொழிகள் என்பனவாகும். அவைகளுள் திராவிட மொழிக் குடும் பத்தைச் சேர்ந்தவை தமிழ், கன்ன டம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற தென்னக மொழிகள், திராவிட மொழிகள் பலவும் தமிழி னின்றும் கி ைள த் த கிளை மொழிகள் என்பர் மொழி இயலார். இம் மொழிகளிடையே இலக்கண, சொல், பொருள் ஒற்றுமைகள் மிகுதி யும் உண்டு.