பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் சங்கம் களும் அதன்பின் ஆங்கிலேயர்களும் ஆட்சியைக் கைப்பற்றினர். அவர்தம் காலங்களில் ஆதரவின்மையால் தமிழ் வளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியும் பெரும் பாதிப்புக்கு ஆளாயின. அன்னியர் ஆட்சியின்போது இஸ் லாமியத் தமிழ் இலக்கியங்களும் கிருத் துவத் தமிழ் இலக்கியங்களும் உருவா யின. தமிழ் கற்ற ஆங்கிலப் பாதிரியார் கள் தமிழில் உரைநடை நூல்களையும் அகராதிகளையும் அறிமுகப்படுத்தி வளர்த்தனர். சிறுகதை, புதினம். திற னாய்வு போன்ற புதுவகை இலக்கியப் படைப்புகள் பெருமளவில் உருவாகித் தமிழ் மொழியைக் காலத்திற்கேற்ப வளர்த்து வளமடைய செய்தனர். விடுதலை இயக்கம் உருவான பின்பு தமிழ் வளர்ச்சி வேகமும் விறுவிறுப்பும் அடைந்தது. பாரதியார், பாவேந்தர், பாரதிதாசனார், திரு.வி.க., மறைமலை யடிகளார், கவிமணி போன்றவர்கள் நாட்டுப்பற்றையும் மொழிப் பற்றையும் மக்களிடையே கொ ழு ந் து வி ட் டு எரியச் செய்தனர். உ.வே. சாமிநாத அய்யர் பழந்தமிழ் இலக்கியங்களை யெல்லாம் திரட்டி, உரை விளக்கம் தந்தார். இதன் மூலம் அவற்றை அழி யாமல் காத்தார். இக்காலத்தில் பல்வேறு பருவ இதழ் களும் வானொலி, தொலைக்காட்சி போன்ற செய்திச் சாதனங்களும் தமிழ் வளர்ச்சியில் முனைப்புக்காட்டி வரு கின்றன. விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக அறிவியல் தமிழ் வலு வோடும் பொலிவோடும் எழுத்தாளர் களால் வளர்க்கப்பட்டு வருகின்றன, இயற்றமிழ் இன்றையக் காலத் தேவையை ஒட்டி இலக்கியத் தமிழா கவும் அறிவியல் தமிழாகவும் முகிழ்த் துள்ளது. 175 தமிழ்ச் சங்கம்: தமிழ் நாடு எவ்வ ளவு பழமையானதோ அவ்வளவு பழைமையானது தமிழ்ச் சங்கம். பழங்காலத்தில் தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடுகள் எனும் பெயரில் மூன்று பெரும் பிரிவுகளாக அமைந் திருந்தன. இம்மூன்று பகுதிகளும் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்களால் த னி த் த னி யே ஆளப்பட்டுவந்தன. இவர் க ளு ள் பாண்டிய மன்னர்கள் தமிழ்ச் சங்கம்’ எனும் ஓர் அமைப்பைநிறுவித்தமிழை வளர்த்து வந்தனர். இது தமிழகம் முழுமையிலிருந்து நாற்பத்து ஒன்பது பெரும் புலவர் களைக் கொண்ட பேரமைப்பாகும். பாண்டிய மன்னரே இச்சங்கத்தின் தலைவராவார். புலவர்கள் இயற்றும் இலக்கியங்கள் எதுவானாலும் இச்சங் கத்தினால் ஏற்றுக்கொள்ளப் பட்டால் மட்டுமே அது சிறந்த இலக்கியப் படைப்பாகக் கருதப்படும். இச்சங்கம் பாண்டிய நாட்டின் தலைநகரிலிருந்து இயங்கியது. முதல் சங்கம், இடைச் சங் கம், கடைச்சங்கம் என்று மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாகக் கூறப்படு கிறது. முதல் தமிழ்ச்சங்கம் அப் போதைய பாண்டிய நாட்டின் தலை நகராக இருந்த தென்மதுரையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நகரம் பின்னர் கடலில் மூழ்கியது. அதன் பின்னர் கபாடபுரம் பாண்டிய நாட்டின் தலைநகராகவே அங்கிருந்து இரண்டாவது தமிழ்ச்சங்கம் இயங்க லாயிற்று. திடீரென ஏற்பட்ட பெரும் கடல் கொந்தளிப்பால் இந்நகரமும் கடலில் மூழ்கியது. இறுதியில் இப் போதுள்ள மதுரை நகரம் பாண்டிய நாட்டின் தலைநகராகியது. இங்கு தான் கடைச்சங்கம் அமைக்கப்பட்