பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 டது. முதல் சங்கமும் இடைச்சங்கமும் எப்போது ஏற்பட்டது எனத் தெரிய வில்லை. கடைச்சங்கம் இரண்டாயி ரம் ஆண்டுகட்கு முன்பு இருந்ததாகக் கருதப்படுகிறது. கடைச் சங்க காலத்தில் எழுதப் பட்ட நூல்கள் சங்க இலக்கியங்கள்’ என அழைக்கப்படுகின்றன. இவை எட்டுத் தொகை, பத்துப் பாட்டு என அழைக்கப்படுகிறது. இந் நூல்கள் மூலம் அக்காலப் புலவர்களையும், அரசர்களையும், ஆட்சியையும் மக்க ளின் வாழ்க்கை நிலை, பண்பாடு கலை, நாகரிகம் ஆகியவைகளைப் பற்றி அறிய முடிகிறது. தமிழ்நாடு: இந்திய மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்றாகும். தமிழ்நாடு இந்தியாவின் தென்கோடி மாநில மாகும்.இம்மாநிலம் வடக்கே ஆந்திர, கர்நாடக மாநிலங்களையும் மேற்கே கேரள மாநிலத்தையும், கிழக்கிலும், தெற்கிலும் கடல்களையும் எல்லைக ளாகக் தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பளவு 1,30,120 சதுர கிலோமீட்டர் ஆகும். மக்கள் தொகை சுமார் 5 கோடிப் பேர். தமிழ்நாட்டில் இரு பெரும் மலைத் தொடர்கள் உள்ளன. கிழக்குமலைத் தொடர் மேற்கு மலைத்தொடரும், நீலகிரி மலையோடு இணைகின்றன. மேற்கு மலைத் தொடர் கேரள, தமிழ் நாடு மாநிலங்களின் எல்லையாக அமைந்துள்ளது. பெரும்பாலான தமிழ்நாட்டுப் பேராறுகள் இம்மலை யில் உற்பத்தியாகி தமிழ்நாட்டின் வழியே கிழக்கு நோக்கி ஓடி கடலில் கலக்கின்றன. இந்நதிகளுள் தாமிர பரணி, வைகை, காவிரி, பாலாறு, பெண்ணையாறு முதலியன முக்கிய ஆறுகள் ஆகும்.தமிழ்நாட்டின் பாசன கொண்டு அமைந்துள்ளது. தமிழ்நாடு வளத்திற்கு காவிரி, வைகை, தாமிர பரணி ஆறுகள் பெருங்காரணமாக அமைந்துள்ளன. tt தமிழ்நாடு மாநிலம் தமிழ்நாடு வெப்ப மண்டலப் பகுதி யைச் சேர்ந்த பகுதியாகும். வட கிழக்குப் பருவ மழையும், தென் மேற்குப் பருவ மழையும் இம் மாநிலத் திற்கு மழைவளம் தருகின்றன. தமிழ்நாட்டின் முக்கியத் தொழில் வேளாண்மைத் தொழிலாகும். காவிரி வைகை, தாமிரபரணி போன்ற பேராறுகள் பாயும் பகுதியில் நெல் மிகுதியாகப் பயிராகிறது. சிற்றாறுகள் மூலம் ஏரி, குளங்களில் நீரைத் தேக்கி நெல், கரும்பு, சோளம், கம்பு போன்ற பயிர்கள் பயிராகின்றன. இவை