பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 துறைமுகமாகும். தூத்துக்குடி, நாகப் பட்டினம், கடலூர் போன்ற இடங் களிலும் சிறிய அளவில் துறைமுகங் கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களும் ஊர்களும்இரயில் பாதைகளாலும் சாலைப் போக்கு வரத்தாலும் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக் கிடையே விமானப் போக்குவரத்து உண்டு. தமிழ் நாட்டில் பதினொரு பல் கலைக் கழகங்கள் அமைந்துள்ளன. இந்தியாவிலேயே கேரள மாநிலத் திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட் டில் தான் எழுத்தறிவு பெற்றோர் தொகை அதிகம். தமிழ்நாடு கலைச் சிறப்பு மிகுந்த மாநிலமாகும். கர்நாடக இசையும் பரதநாட்டியமும் இம்மாநிலத்திற்கே யுரிய கலைச் செல்வங்களாகும். சிற் பக் கலையும் இங்கு செழித்துவளர்ந் துள்ளது. கும்மி, கோலாட்டம், பொய் கால் குதிரை, கரகாட்டம், காவடி போன்ற நாட்டுப்புறக் கலைகளும் இங்கு செழித்து வளர்ந்துள்ளன. இவை அனைத்தும் தமிழரின் கலைச் சிறப்பையும் பண்பாட்டுத் திறனையும் விளக்குவன ஆகும். யாழ், வீணை, நாதசுரம், மிருதங்கம் போன்றவை இசைக் கருவிகள் ஆகும். பித்தளை, செம்பு, வெண்கலம் போன்ற உலோ கங்களைக் கொண்டு சிலை முதல்ா ன பல்வேறு வகையான கலைப் பொருட்கள் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் பட்டுப் புடவைகளும் பத்தமடைக் கோரைப் பாய்களும் தமிழ்நாட்டிற்கு உலகப் புகழ் தேடித் தருபவைகளாகும். தாய்லாந்து: இரண்டாம் உலகப் போருக்கு முன் சயாம் என வழங்கப் பட்ட நாடே இன்று தாய்லாந்து தாய்லாந்து என்று அழைக்கப்படுகிறது. ஆசியா வின் தென்கிழக்கில் இந்நாடு அமைந் துள்ளது. இந்நாட்டின் கிழக்கே தாய்லாந்து லாவோஸ், கம்போடியா நாடுகளும் மேற்கே பர்மாவும் தெற்கே மலேசியா வும் இந்நாட்டின் எல்லைகளாகும். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் ஆகும். தாய்லாந்து நாட்டின் மொத்தப் பரப்பளவு 5,14,000 சதுர கிலோ மீட்டர் ஆகும். மொத்தப் பரப்பில் காடுகளே அதிகம். வடக்குத் தாய் லாந்துக் காடுகளில் தேக்கு மரங்கள் மிகுதியாக வளர்கின்றன. நாட்டின் தென்பகுதியில் ரப்பர் விளைகிறது. மத்திய தாய்லாந்து முழுமையும் ஆறு களால் அடித்து வரப்படும் வண்டல்