பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை அடைப்பான் தென் துருவத்தைச் சென்று கண்ட வர் ஆமுன்சென் என்பவராவார். இவர் நார்வே நாட்டைச் சேர்ந்தவர். இவரைத் தொடர்ந்து இந்தியா உட் பட பல நாட்டவர் இங்கு சென்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்தியா தென் துருவ ஆராய்ச்சி யில் மிகுந்த ஈடுபாடு காட்டி வரு கிறது. இந்தியக் குழுவினர் அடிக்கடி சென்று தொடர் ஆய்வுகள் நிகழ்த்தி வருகின்றனர். இந்தியர்கள் ஆய்வு செய்யும் தென் துருவப் பகுதி 'தrண் கங்கோத்திரி என அழைக் கப்படுகிறது. - தென் - வட துருவ அச்சில் தான் உலகமே சுழன்று கொண்டிருக்கிறது. இந்த இரு துருவ அச்சுகளும் நேர் செங்குத்தாக அமைந்திருக்கவில்லை. சிறிது சாய்வாக உள்ளது. - பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பது நீங்கள் அறிந்ததே. அவ் வாறு சுற்றிவர ஓர் ஆண்டு ஆகிறது. இந்த ஒராண்டுக் காலத்தில் வட துருவம் ஆறுமாத காலம் சூரியனை நோக்கிச் சாய்ந்திருக்கும். அதனால் தென் துருவம் சூரியனுக்கு எதிர்ப்புற மாகச் சாயும். இந்த ஆறுமாத கால மும் தென்துருவத்தில் சூரியன் தென் படுவதே இல்லை. அடுத்த ஆறுமாத காலம் தென் துருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்திருக்கும். இக் காலத் தில் வட துருவத்தில் சூரியனைக் காணமுடியாது. இவ்வாறு ஒவ்வொரு துருவமும் ஆறுமாதம் பகலாகவும், ஆறுமாதம் இருளாகவும் இருக்கும். தேசிய கீதம்: உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியே தேசிய கீதம் உண்டு. அந்தந்த நாடு களின் சிறப்பையும் உயர்வையும் 181 புகழ்ந்து பாடுவதே தேசிய கீதம் ஆகும். அரசு விழாக்கள், மிக முக் கிய பொது நிகழ்ச்சிகளின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அப் போது எல்லோரும் அமைதியாக எழுந்துநின்று மரியாதை செய்வர். எல்லோரும் சேர்ந்து பாடுவதும் உண்டு. இந்திய நாட்டின் தேசிய கீதம்: ஜன கண மன அதிநாயக ஜய ஹே பாரத பாக்ய விதாதா, பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா திராவிட உத்கல வங்கா விந்திய ஹிமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா, தவ சுப நாமே ஜாகே தவ சுப ஆசிஷ மாஹே காயே தவ ஜய காதா ஜன கண பங்கள தாயக ஜயஹே பாரத பாக்ய விதாதா, ஜயஹே! ஜயஹே! ஜயஹே! ஜய ஜய ஜய ஜயஹே! இந்திய தேசிய கீதத்தை இயற்றிய வர் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். இப்பாடல் 1911ஆம் ஆண் டில் கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது இசைக்கப்பட்டது. இதே பாடலை 1950 ஜனவரி 24 முதல் இந்திய தேசிய கீதம் என அரசியல் அமைப் புச் சட்டம் ஏற்றுக்கொண்டு சட்ட மாக்கியது. தொண்டை அடைப்பான் : இது குழந்தைகளுக்கு உண்டாகும் ஒரு வகைத்தொற்று நோயாகும். இதை ஆங்கிலத்தில்'டிப்தீரியா (Diptheria) என அழைப்பார்கள். இக்கொடிய நோய் ஒருவகைக் கிருமிகளால் உண் டாகிறது.