பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலம் கோள்களின் வழியே உலகெங்கும் ஒளிபரப்ப எளிதாகிறது. தொடக்க காலத்தில் கருப்பு வெள்ளையில் மட்டுமே ஒளிபரப்ப முடிந்தது. இன்று வண்ணங்களில் ஒலிபரப்ப இயலுகின்றது. கையடக்க தொலைக் காட்சிப் பெட்டிகள் எல்லாம் இன்று புழக்கத்திற்கு வந்துவிட்டன. இத னால் நாம் செல்லுமிடம் எல்லாம் தொலைக்காட்சியைக் கண்டு களிப் பது எளிதாக ஆகியுள்ளது. தொலைபேசி தொலைவில் உள் ளவர்களுடன் பேசப் பயன்படும் தொலைபேசிக் கருவி இன்றைய 1892இல் பெல் நியூயார்க்-சிகாகோ தொைைபேசித் தொடர்பைத் தொடங்கி வைக்கிறார். வாழ்வில் மிக முக்கியமான இடத் தைப் பெற்றுள்ளது எனலாம். நாம் பேசும் ஒலி, அலைகளாக மாற்றப்பட்டு, பின் அவை மின்சக்தி யாக ஆக்கப்படுகின்றது. இம்மின் சக்தி, மின்கம்பி வழியாக நீண்ட தூரம் செலுத்தப்பட்டு அடுத்து முனையில் அவை மீண்டும் ஒலி அலைகளாக மாற்றப்படுகின்றன.இக் 188 தகைய செயற்பாட்டினை உடை யதே தொலைபேசி. 1876இல் இக் கருவியைக் கண்டுபிடித்தவர் அலெக் சாண்டர் கிரகாம்பெல் எனும் அமெ ரிக்கர் ஆவார். கடலடி கம்பி வடம் மூலமும் செயற் கைக் கோள் வாயிலாகவும் உலகெங் கும் உள்ள யாரோடும் தொடர்பு கொண்டு பேச முடியும். தொலை பேசிகளை ஒருங்கிணைக்க ஆங் காங்கே தானியங்கித் தொலைபேசித் தொடர்பகங்கள் உள்ளன. தொலைவில் உள்ளவர்களின் குரலைக் கேட்பதோடு அவர்கள் பேசுவதைக் காட்சியாகக் காணும் புதுவகைத் தொலை பேசிகளும் கண்டுபிடிக்கப் , பட்டுள்ளன. இது காட்சித் தொலைபேசி என அழைக் கப்படுகிறது. நரம்பு மண்டலம்: நம் உடலின் இன்றியமையா உறுப்பு நரம்பு மண்டலமா கும். நம் உடல் உறுப்புகள் அனைத்தின் செய்திகளை மூளைக்கு அனுப்புவதும் மூளை இடுகின்ற கட்டளை களை உடல் உறுப்புகளுக் குக் கொண்டு சேர்ப்பதும் இந்நரம்பு மண்டலமேயாகும். எனவே, உடல் உறுப்புகள் அனைத்தும்'நரம்புகள் வழி யாக மூளையுடன் இணைக்கப்பட் டுள்ளன. நரம்பு மண்டலமானது மூளை, தண்டுவடம், நரம்புகள் ஆகிய மூன்றும் இணைந்த ஒன்றாகும். நரம்பு மண்டலம் கோடிக்கணக் கான நரம்பணுக்களால் ஆகியது. நரம்பு மண்டலத்தை இரு பெரும்