பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது உணர்ச்சி நரம்புகள், இரண்டாவது இயக்க நரம்புகள் ஆகும். உணர்ச்சி நரம்புகள் உடலிலுள்ள ஐம்புலன் N ২) நரம்பு மண்டலம் களின் செய்திகளை மூளைக்கு எடுத் துச் செல்கின்றன. இயக்க நரம்புகள் மூளை இடுகின்ற கட்டளைகளை ஐம்புலன்களுக்குக் கொண்டு சென்று அறிவிக்கின்றன. மொத்த நரம்பு மண்டலத்தையும் இரண்டு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். அவை 1. மத்திய நரம்பு நரம்பு மண்டலம் மண்டலம். 2. பரிவு நரம்பு மண்ட லம் ஆகும். மத்திய நரம்பு மண்டலம் மூளையும் தண்டுவடமும் அவை தொடர்பான நரம்புகளும் இணைந்த பகுதியாகும். பரிவு நரம்பு மண்டலம் உடல் உள்உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்ய உதவுகிறது. நரம்பு மண்டலத்தின் மிக முக்கிய உறுப்பான மூளை தலைப் பகுதியில் அமைந்துள்ளது. அதனோடு இணைந்த தண்டுவடம் மூளையுடன் அடிப்பகுதியிலிருந்து முதுகுத்தண்டு வழியே செல்கிறது. தண்டுவடத்தி லிருந்து பல்வேறு கிளைகளாகப் பிரிந்து செல்லவும் நரம்புகள் உட லெங்கும் உள்ள தலைகளுடனும் தோலுடனும் இணைந்துள்ளன. உடல் எங்கும் ஏற்படும் பல்வேறு வகையான உணர்ச்சிகள் நரம்புகள் மூலம் தண்டுவடத்தை அடைந்து, பின் அங்கிருந்து மூளையை எட்டு கின்றன. மூளை பிறப்பிக்கும் கட் டளைகளையும் தண்டுவடத்தின் வழியே நரம்புகள் மூலம் அவ்வப் பகுதியை அடைகின்றன. இவ்வாறு தண்டுவடமான மூளையையும் நரம்பு களையும் இணைக்கும் இணைப்புப் பாலமாகத் திகழ்கிறது. - சிலசமயம் மூளையின் கட்டளை இல்லாமலே உடல் காரியங்கள் செயல்படுவது உண்டு. உதாரண மாகச் சூடான பொருள்மீது பட்ட வுடன் கையை விரைந்து இழுத்துக் கொள்கிறோம். இதற்கு அனிச்சைச் செயல் என்பது பெயராகும். இதற் கான ஆணையை தண்டுவடமே பிறப்பிக்கிறது. பல்வேறு நரம்பணுக் களால் ஆன பரிவு நரம்பு மண்டலம் இரைப்பை, குடல் போன்ற உடல் உறுப்புகள் செவ்வனே பணியாற்ற உதவுகிறது.