பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவமணிகள் நவமணிகள்: ஒன்பது வகையான விளையுயர்ந்த நவமணிகள் ஆகும். அவை வைரம், வைடூரியம், புட்ப ராகம், மாணிக்கம், மரகதம், நீலம், பவளம், முத்து, கோமேதகம் ஆகும். இவை கடினத்தன்மை கொண்டவை களாகும். இவற்றின் அழகையும் கடினத் தன்மையையும் வைத்தே இவற்றின் மதிப்பு அளவிடப்படு கிறது. களே நகைகள் செய்ய ஏற்றவை யாகும். நவமணிகளின் கடினத் தன்மை ஒன்று முதல் பத்து வரை கணக்கிடப்பட்டுள்ளது. நவமணிகளில் மிகுந்த கடினத் தன்மை உள்ள மணி வைரமாகும். இது கரியின் படிக வடிவமாகும். பூமி யின் அடிப்பகுதியில் ஒரே சமயத்தில் மிகுந்த வெப்பம், அழுத்தம் ஆகிய வற்றிற்கு ஆளாகும் கரி வைரப் படி வங்களாக உருமாறுகின்றன. இத னைப் பாறைகளோடு வெட்டி எடுக் கிறார்கள். வைரங்கள் வெண்மை நிறமாக இருக்கும். சில சமயம் மஞ்சள், பழுப்பு, நீலநிறமாக இருத்த லும் உண்டு. பட்டை தீட்டிய வைரங் கள் ஒளி மிகுந்து காணப்படும். வைரம் கடினத்தன்மை மிகுந்ததால் கண்ணாடி பீங்கான் போன்றவற்றை அறுக்கப் பயன்படுகிறது. வைடூரியம் பல்வேறு தாதுப் பொருட்களுக்குப் பெயராக வழங்கு கிறது. வைடூரியம் பொன்நிறத்திலும் சாம்பல், பழுப்பு, பச்சை வண்ணங் களிலும் கிடைக்கிறது. இது சீனா, இலங்கை, பிரேசில் ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. புட்பராகம், வைரத்திற்கு அடுத்த படியாகக் கடினத்தன்மை உள்ளதா கடினத்தன்மை மிக்க மணி 185 கும். இது மஞ்சள் மற்றும் நீல நிறங் களில் கிடைக்கிறது. இது பிரேசில், சோவியத் நாட்டிலுள்ள யூரல் மலைப்பகுதிகளில் கிடைக்கிறது. மாணிக்கம் நவமணிகளில் கடினத் தன்மை குறைந்த மணியாகும். இது செந்நிறமானது. இதன் நிறம் இதற்கு வேண்டிய எழிலை அளிக்கிறது. அழ கும் மதிப்புமிக்க மாணிக்கத்தை பல ரும் விரும்பி அணிந்து மகிழ்வர். மாணிக்கம் போன்று கடினத் தன்மை குறைந்தது மரகதம் ஆகும். இதன் நிறம் பச்சையாகும். சோவியத் தில் உள்ள யூரல் மலைப்பகுதி, தென் அமெரிக்காவிலுள்ள கொலம் பியாவில் மரகதம் கிடைக்கிறது. நவமணிகளில் நீலமும் அழகு நிறைந்த மணியாகும். இது நீல நிறத் தில் மட்டுமல்லாது வேறு சில நிறங் களிலும் கிடைக்கிறது. இதனிடையே ஒலி ஊடுருவிச் செல்லும். உலகி லேயே மிகச் சிறந்த நீலம் இந்தியா வில் உள்ள காஷ்மீரத்தில் கிடைக் கிறது. இலங்கையிலும் ஆஸ்திரேலி யாவிலும் கூட கிடைக்கிறது. பவளம் கடலில் வாழும் ஒருவகை உயிரினங்களால் உருவாக்கப்படுவ தாகும். நாளடைவில் இவை பெரி தாகப் பாறைபோல் காணப்படும். இதன் பெருக்கத்தினால் சிறுசிறு பவளத் திட்டுகளும் பவளத் தீவு களும் கூட ஏற்படுவதுண்டு. பசிபிக் பெருங் கடலில் இத்தகைய பவளத் தீவுகள் பல உள்ளன. பவளங்கள் சிவப்பு, இளஞ்சிவப்பு. மஞ்சள், கருப்பு என நான்கு வண்ணங்களில் கிடைக்கின்றன. பவளங்கள் பெரும் பாலும் அணிமணிகள் செய்யவே பயன்படுகின்றன. பவள அணிகள்