பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 இன மக்கள் பெரும் பகுதியினர் ஆவர். வீர உணர்வுமிக்க இவர்கள் இராணுவத்தில் பணிபுரிகிறார்கள். இந்நாட்டின் முக்கிய சமயம் இந்து சமயம் ஆகும். இது அரசுச் சமயமும் ஆகும். இங்குள்ள இந்து சமயக் கோயில்களும் புத்த கோயில்களும் புகழ்பெற்று விளங்குகின்றன. புத் தர் பிறந்த லும்பினி எனும் கிராமம் இந் நாட்டில்தான் உள்ளது. நேப்பாள நாட்டின் மொத்தப் பரப்பளவு இலட்சத்து நாற்ப தாயிரம் கிலோமீட்டர் ஆகும். மொத்த மக்கள் தொகை ஒன்றரைக் கோடி ஆகும். நேப்பாள நாட் டின் தலைநகரம் காட்மண்டு ஆகும். நேரு: ஆசிய ஜோதி எனப் பெருமையுடன் அழைக்கப்படும் பண் டித ஜவர்ஹர்லால் நேரு அவர்கள் இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். அண்ணல்காந்தியடிகளின் பேரன்புக் குரியவரான நேரு அண்ணல்ாரின் வாரிசாக அவரால் அறிவிக்கப்பட்ட வர். இந்திய விடுதலைப் போராட்டத் தில் நீண்ட காலம் ஈடுபட்டவர். விடுதலை பெற்ற இந்தியாவில் 18 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராகப் பணியாற்றியவர். 1889ஆம் ஆண்டு நவம்பர் 14இல் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் அலகாபாத் நகரில் பிறந்தார். இவரது தந்தை அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய வழக்கறிஞர் மோதிலால் நேரு ஆவார். இவர் சிறந்த தேச பக்தரும் ஆவார். தனது 15 வயது வரை வீட்டி லேயே தனி ஆசிரியரிடம் கல்வி பெற்ற்ார். பின்னர் 1905இல் இங்கி லாந்து சென்று ஹாரோபள்ளி, டிரி நேரு னிட்டிக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். பின், இரண்டாண்டு சட்டக் கல்வி பெற்று இந்தியா திரும்பினார். தன் தந்தை மோதி بماند. ஜவஹர்லால் நேரு லால் நேருவோடு இணைந்து அலகா பாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறி ஞர் தொழிலைத் திறம்பட நடத்தி னார். கமலா எனும் பெண்மணியை 1916இல் தி ரு ம ண ம் செய்து கொண்டார். தேசபக்தி உணர்வு மிக்கவரான நேரு 1919ஆம் ஆண்டு வாக்கில் அ ண் ண ல் காந்தியடிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். அதன்பின் நடைபெற்ற விடு தலைப் போராட்டம் அனைத்திலும் பெரும் பங்கு கொண்டார். ஒன்பது முறை சிறை சென்றார். 18 ஆண்டு களைச் சிறையில் கழித்தார். இவர் தம் சிறைவாச நாட்களை நிறைய நூல் களைப் படிப்பதிலும் அவைகளைப் பற்றிச் சிந்திப்பதிலும் செலவிட் டார். அதன் விளைவாக இவர் எழு