பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்ரீத் திய நூ ல் க ளே விடுதலையை நோக்கி: (Towards Freedom) 'உலக வ ர ல | ற் றி ன் கண் Gorrl Löläsir” (Glimpses of world history),"இந்தியாவைக் கண்டறிதல்’ (Discovery of India) Gursorp (576.) கள். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல்கள் மிகச் சிறந்த படைப்பு களாகப் போற்றப்படுகின்றன. 1920முதல் சுமார் 26ஆண்டுக் காலம் விடுதலைப் பேரியக்கமான காங்கிரசின் செயலாளராகவும் தலை வராகவும் விளங்கினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1946இல் ஏற்பட்ட இடைக்கால இந்திய அரசு இவர் தலைமையில் அமைக்கப்பட் டது. 1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா விடுதலைபெற்ற பின்னர் இவரைப் பிரதம மந்திரியாகக் கொண்ட புதிய இந்திய அரசு பதவியேற்றது. 1950 ஜனவரி முதல் இந்தியா குடியரசு ஆகியது. அன்று முதல் தன் இறப்பு வரை 1964 மே 27வரை சுமார் 18 ஆண்டுகள் பாரதப் பிரதமராகப் பணியாற்றினார். இவர் தமது ஆட்சிக் காலத்தில் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டி இந்தியாவின் பொருளாதார வளர்ச் சிக்கு வழிகோலினார். சிறந்த ஜனநாயகவாதியான நேரு உலக அமைதிக்காக இடையறாது உழைத்தார். சிறந்த எழுத்தாளரும் பேச்சாளரும் ஆன நேரு குழந்தை களிடம் பேரன்பு காட்டி வந்தார். அவரது பிறந்தநாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். நோபல் பரிசு உலகில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் சாக னையாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் உலகப் பரிசு நோபல் 198 பரிசு ஆகும். நோபல் எனும் அறி வியல் அறிஞரின் பெயரால் இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல் பிரட் நோபல் எனும் அறிவியல் ஆய் வாளர் வெடிமருந்தைக் கண்டுபிடித் தார். இதன் மூலம் மிகுந்த செல்வம் குவித்தார். இச் செல்வத்திலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து துறைதோறும் இயற்பியல், வேதி யியல், மருத்துவம், இலக்கியம்,உலக சமாதானம் ஆகியவற்றில் உலக சாதனை செய்வோருக்குப் பரிசளிக்க ஏற்பாடு செய்தார். அதன்படி சாத னையாளர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் பரிசளிக்கப்பட்டு வருகிறது. இப்பரிசை தேர்ந்தெடுக்கும் குழு வை நோபல் நிறுவனமும் (Nobel Foundation) சுவீடன் அரசும் நியமித் துத் தேர்ந்தெடுக்கிறது. நம் நாட்டில் நோபல் பரிசை மூவர் பெற்றுள்ளனர். இலக்கியத்திற்காக கவிஞர் தாகூரும் (1918) இயற்பிய லுக்கான பரிசை விஞ்ஞானி சர்.சி.வி. இராமனும் (1980) உலக சமாதானத் துக்கான பரிசை அன்னை தெரசா வும் (1979) பெற்றுள்ளனர். பக்ரீத். இஸ்லாமியர்களாகிய முஸ் லிம்களின் மிக முக்கிய பண்டிகை 'பக்ரீத் ஆகும். இதனை ஈதுல் அள் ஹா' என்றும் அழைப்பார்கள். இப்றா ஹீம் நபி (அலை)இறைவனின் வி ருப் பம் எனக் கருதி தன் ஒரே மகனை இறைவனுக்குப் பலியிடத் துணிந்த தியாகத்தை நினைவு கூறும் நாளா கக் கொண்டாடப்படுகிறது. ' இத் தியாகத் திருநாள் ஹஜ் பெரு நாளாகவும் அமைந்துள்ளது. இஸ்