பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 அழைத்தார்கள். இப்பொருளே இன் றைய பிளாஸ்டிக்குக்கு முன்னோடி. தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சி யின் விளைவாக 1909ஆம் ஆண் டில் "பேக்கலைட்' எனும் ஒரு வகைப் பிளாஸ்டிக் பொருளைக் கண்டுபிடித் தார்கள். இதிலிருந்து உருவாக்கப்பட் டதே இன்றைய பிளாஸ்டிக். பிளாஸ்டிக் செய்யப்படும் பொருள் கள் கனம் குறைந்தவை விலை மலி வானவைவேதியியல் மாற்றங்கள் ஏற் படுவதில்லை. மின்சாரத்தைக் கடத் தும் தன்மை இல்லாததால் மின்காப் புறைகளாகப் பயன்படுத்தப்படுகிறது. எழுதும் பேனா முதல் தண்ணிர்த் தொட்டிவரை பல்வேறு வகையான பொருள்கள் பிளாஸ்டிக்கினால் செய் யப்படுகின்றன. பிளேட்டோ இவர் கிரேக்க நாட் டின் மாபெரும் சிந்தனையாளர் ஆவார். இவர் இரண்டாயிரத்து ஐந் நூறு ஆண்டுகட்குமுன்பு வாழ்ந்தார். சாக்கரட்டீஸ் எனும் பேரறிஞரின் மாணவர், ஏதென்ஸ் நகரில் வாழ்ந்த செல்வ வளமிக்க கிரேக்கக் குடும்பமொன் றில் பிறந்தார். இளமையிலேயே கவிதை, இசை, தத்துவம் போன்ற வைகளை நன்கு கற்றுத் தேறினார். இளம் வயதிலேயே சாக்கரட்டிசின் மாணவரானார். சாக்கரட்டீஸ் நஞ் சூட்டிக் கொல்லப்பட்ட பின்னர் இவர் தத்துவத் துறைகளில் தன் குரு நாதரைப் பின்பற்றி அத்துறையில் பெருங்கவனம் செலுத்தினார். இதற் கென அக்காதெமி' எனும் கல்வி அமைப்பை உருவாக்கினார். அரிஸ் டாட்டில் போன்ற மாணவர்களை தத்தவத் துறையில் மாமேதைகளாக் கினார். பூகம்பம் இவர் பல நூல்களை எழுதினார். அவை யெல்லாம் தத்துவக் கருத்து களை உள்ள டக் கியன வா கும். இவர் எழு திய குடியரசு' எனும் நூல் மிகச் சிறந்த சி ந் த ைன க் க ள ஞ் சி ய மாகும். இதில் : இவர் கன வு இ கண்ட இலட் சிய அரசொன் றை விளக்கி யுள்ளார். பிளேட்டோ இவரது சிந்தனை வழியில் » (Ij வானதே ஐரோப்பியச் சிந்தனையும் நாகரிகமும். பூகம்பம் நில அதிர்வைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் அதிர்வு மிகுதிப்படும்போது பூகம்ப மாக வெடிக்கிறது. பூமியின் மீது வண்டல்மண் படியப் படிய பல அடுக்குகள் உருவாகின் றன. இவைகளின் அடிப்பகுதி அழுத் கம் பெறுகிறது. பலப்பல ஆண்டுகட் குப்பின் இவ்வழுத்தம் அளவைக் கடக் கும்போது அழுத்தம் தாங்காமல் அடிப்பகுதி வெடிக்கிறது. அப்போது நில அடுக்குகள் பிளவுறுகின்றன. அதுவே பூகம்பம் ஆகும். இந்தியா வில் இமயமலை அடிவாரத்திலும் ஜப்பான் மலைப்பகுதியிலும் ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலும் இத்தகைய நில நடுக்கமும் பூகம்பமும் ஏற்படுவ துண்டு. r பூகம்பத்தின் கடுமையைக் கணக் கிடவும், பூகம்ப அறிகுறிகளைக் கண் டறியவும் நவீனக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.