பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 மாக வண்டல் படிவ்தால் நிலம் மிக வும் வளம் அடைகிறது. இதனால் நெல், கரும்பு, சணல் முதலிய பயிர் கள் செழிப்பாகப் பயிராகின்றன. இம் மாநிலத்தில் வடபகுதி இமயமலைச் சாரலாக அமைந்துள்ளதால் அங்கே தேயிலை நிறைய விளைகிறது. நிலக் கரி ஏராளமாகக் கிடைப்பதால் நிலக் கரிச் சுரங்கத் தொழிலும் அதனைத் தொடர்ந்து பல்வேறு ஆலைகளும் இயந்திரத் தொழில்களும் நன்கு வளர்ந்துள்ளன. இந்தியாவிலேயே மிகப் பெரியதான துர்க்காபூர் இரும் புத் தொழிற்சாலை இம்மாநிலத்தில் தான் அமைந்துள்ளது. அதே போன்று ரெயில் எஞ்சின் தொழிற் சாலையான சித்தரஞ்சன், மிஹிஜம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. கல்வி வளர்ச்சிமிகுந்த இம்மாநிலத் தில் கவியரசர் தாகூர் நிறுவிய ‘விசுவ பாரதி' எனும் புதுமையான பல்கலைக் கழகம் போல்பூர் எனு மிடத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் வடகோடியில் இமயமலைப் பகுதியில் புகழ்பெற்ற டார்ஜிலிங் மலை வாசத்தலம் அமைந் துள்ளது. பனிச் சிகரங்களை இங் கிருந்து காண மிகவும் அழகாக இருக் கும். மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கல்கத்தா. இது உலகிலுள்ள மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாகும். ரமளான்: இது இஸ்லாமிய ஆண் டின் ஒன்பதாவது மாதமாகும். இம் மாதத்தில்தான் இஸ்லாமிய வேத மான திருக் குர்ஆன் முகம்மது நபி (சல்) அவர்கட்கு முதன் முதலாக இறைவனால் அருளப்பட்டது. இஸ்லாமிய ஐம்பெரும் கடமை களில் ஒன்று நோன்பு இம்மாதத், ரவீந்திரநாத் தாகூர் தில் முதல் பிறை கண்டது முதல் தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள். அதிகாலையிலேயே உண்பதையும் பருகுவதையும் நிறுத்தி விடுவார்கள். மாலையில் சூரியன் மறைந்த பிறகே உண்ணவோ பரு கவோ தொடங்குவார்கள். இதுவே ரமளான் நோன்பு ஆகும். முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாள் இரவிலும் தராவீஹ்' எனும் சிறப்புத் தொழுகை நடத்துவார்கள். அப்போது திருக்குர்ஆன் வசனங்கள் ஒதப்படும். இவ்வாறு ஒதுவது இருபத் தியேழாம் நாள் முடிவுறும். முப்பது நாட்கள் நோன்பு முடித்த மகிழ்ச் சியை ர ம ள ா ன் பெருநாளாகக் கொண்டாடி மகிழ்வர். இம்மாதத்தில் இல்லாதோருக்கு நிறைய தானம் தந்து மகிழ்வர். இதனால் இப் பண்டிகை ஈகைத் திருநாள்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ரவீந்திரநாத் தாகூர்: ஜன கண மன' எனத் தொடங்கும் இந்திய தேசிய கீதத்தை எழுதியவர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆவார். を続 o и ரவீந்திரநாத் தாகூர் மாபெரும் இலக்கியச் செல்வரான இவர் தலைசிறந்த தேசப்பற்றாளரும் ஆவார். இலக்கியத்துக்காக உலகப்