பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سمسمسم 212 இளமைதொட்டு தன் இன்னுயிர் நீங்கும்வரை இந்திய நாட்டின் மேம் பாட்டுக்காக இடையறாது உழைத்த வர் சாஸ்திரி. அரசியல் தூய்மையைக் கடைப்பிடித்த இவர் தன் வாழ்க்கை யை மிக எளிமையாக நடத்தினார். லெனின் இவர் சோவியத் ரஷியா வின் மிகப்பெரும் தலைவர் ஆவார். இவரது முழுப்பெயர் விளாடிமிர் இலியிச் உலியனாவ் என்பதாகும். இவர் சோவியத் குடியரசை நிறு வியவர். சோவியத் தந்தை'யாகப் போற்றப்படுபவர். பொதுவுடை மைக் கொள்கையை மக்களிடையே முனைப்பாகப் பரப்பியவர். மிகச் சிறந்த கிந்தனையாளர், அரசியல் அறிஞர் ஆவார். சட்டக் கல்வியும் பொதுவுடிைமைத் தத்துவக் கோட் பாடுகளையும் கற்றுணர்ந்த மேதை. ரஷிய மன்னர்களை எதிர்த்து கிளர்ச்சி நடந்தது. அப்போது மன்னர் மூன்றாம் அலெக்சாண்ட ரைக் கொல்ல சதி செய்ததாக இவ ரது சகோதரர் தூக்கிலிடப்பட்டார். அதனால் அரசை எதிர்க்கும் புரட்சிக் காரராக லெனின் உருவெடுத்தார். Qsessfsir அக்கால ரஷியா வறுமையில் வாடி யது. மக்களுக்கு வா க் கு ரி ைம இல்லை. அரசு அதிகாரிகளும் மன்னர் குடும்பமும் பிரபுக்களும் பணக்காரர்களும் ஏ ைழ க ளி ன் உழைப்பைச் சுரண்டி உல்லாசமாக வாழ்ந்து வந்தனர்.இதனால் மனக் கசப்பு அடைந்த மக்கள் ஆங் காங்கே குழுக்கள் அமைத்து அரசை எதிர்த்துப் போராட வழி வகுத்தார். பொதுவுடைமைத் தத்துவத்தை மக்க ளிடையே தீவிரமாகப் பரப்பினார். இதற்காக தொழிலாளர் விடுதலை அமைப்பை உருவாக்கினார். இத னால் அரசால் இவர் சைபீரியர்வுக்கு நாடுகடத்தப்பட்டார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற லெனின் அங் கிருந்த ரஷிய மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கி வழி நடத்தினார். 1906இல் ரஷியாவுக்கும் ஜப்பா னுக்குமிடையே நடந்த போரில் ரஷியா தோல்வியுற்றது. ஆட்சி மீது வெறுப்படைந்த மக்கள் கிளர்ச்சி மு ன் ைன வி ட தீவிரமாகியது. லெனின் ரஷியாவுக்குள் இரகசியமாக நுழைந்தார். ஆனால் கிளர்ச்சியை அரசு அடக்கியதால் மீண்டும் ஐரோப் பிய நாடுகளுக்குத் தப்பிச் சென்றார். உலகப்போர் முதல் மூண்டது. ரஷியா ஜெர்மனியுடன் மும்முரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது லெனின் ரஷியாவுக்குள் புகுந்தார். மக்கள் கிளர்ச்சிகளைத் தீவிரமாக்கி னார். ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் தோல்வி ஏற்படவே மீண்டும் தலைமறைவானார். ஆயி னும் இரகசியமாகப் புரட்சிக்கட்சி' யைத் தொடங்கிக் கிளர்ச்சியைத் தீவிர மாக்கினார். விரைவிலேயே ஆட்சியைக் கைப்பற்றி உலகின் முதலாவது பொதுவுடைமை ஆட்சி யை ரஷியாவில் நிறுவினார். -