பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர் கள் அழுத்தம் மிகுந்தவையாகும். வால் நட்சத்திரம் சூரியனின் அருகே வரும்போது இதிலுள்ள வாயுவையும் கதிர்களையும் எதிர்ப்புறம் தள்ளுகின் றது. இதனால் இப்பகுதி நீண்ட வால் போல் தோற்றமளிக்கின்றது. வால் நட்சத்திரங்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கண்ணுக்குத் தெரிவதில்லை. நுண்பெருக்காடி மூலமே பார்க்க முடியும். விண்வெளிப் பயணம்: விண்ணில் காற்று மண்டலத்தைத் தாண்டிப் பயணம் செய்வது மனிதனுக்கு இய லாத ஒன்றாகவே இருந்து வந்தது. காரணம் காற்று இல்லாத வானில் விமானம் பறக்க இயலாது என்பதே யாகும். ராக்கெட்டுகள் கண்டுபிடிக் கப்பட்ட பின்னரே இது இயல்வ தாயிற்று. திரவமாக்கப்பட்ட உயிர்வளியும் (Oxygen) திரவ எரி சாராயமும் கலந்த கலவையை எரியச் செய்வ தன் மூலம் எழும் உந்து விசையைக் கொண்டு ராக்கெட்டுகள் செலுத்த முடியும் என்பதை ரஷிய, ஜெர்மா னிய, அமெரிக்க விஞ்ஞானிகள் கண் டறிந்தார்கள். * அமெரிக்க விஞ்ஞானி கோடார்டு என்பவர் 1985இல் வானில் சுமார் 2,800 கிலோமீட்டர் உயரத்திற்கு 1,100 கிலோமீட்டர் வேகத்தில் ராக் கெட்டைச் செலுத்தி சாதனை படைத்தார். பூமியிலிருந்து கிளம்பி விண்ணை நோக்கிச் செல்லும் ராக்கெட் புவி யீர்ப்பால் ஈர்க்கப்படுகிறது. இதனால் குறைந்தது 4,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டியுள்ளது. விண்வெளிப் பயணம் மேலும் காற்று மண்டலத்தில் விரைந்து செல்லும்போது ஏற்படும் காற்று உராய்வினால் வெப்பமுண்டா கிறது. இவ்வெப்பத்தால் ராக்கெட்டே எரிந்து போக நேரிடும். எனவே, இவ்வெப்பத்தைத் தாங்கிச் செல்லக் கூடிய ராக்கெட்டுகளைத் தயாரிக்க வேண்டிய அவசியமேற்பட்டது. இதன் விளைவாக 1957 அக்டோ பர் 4ஆம் நாள் ஸ்புட்னிக்-1’ எனும் செயற்கைக் கோளை ரஷியா உரு வாக்கி விண்ணில் செலுத்தியது. இது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமி யைச் சுற்றி வந்தது. சந்திரனைப் போல் பூமியைச் சுற்றும் காரணத் தால் இது செயற்கைச் சந்திரன்' என்றும் மக்களால் அழைக்கப்படு கிறது. விண்ணோக்கிப் புறப்படும் ராக்கெட் jo. அதே ஆண்டு நவம்பரில் ஸ்புட் னிக்-2 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் “லைக்கா என்ற நாய் வைக்கப்பட் டிருந்தது. அதன் இதயத் துடிப்பு. மூச்சின் அளவு ஆகியவை பதிவு செய்யப்பட்டன. இச் சோதனையி