பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாகீர் ஹ-சேன் ஆண்டு பிப்ரவரி 8இல் பிறந்தார். இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தி லுள்ள எடவா என்ற ஊரில் உயர் நிலைக் கல்வி கற்றார். பின்னா அலிகார் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து மேற்கல்வி பெற ஜெர்மன் நாடு சென்றார். அங்குள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப் பை முடித்து டாக்டர் பட்டம் பெற் றார். இளமை தொட்டே பொது நல சேவையில் மிகுந்த ஆர்வமுடைய வராக இருந்தார். அதிலும் கல்வித் தொண்டில் ஈடுபடுவதில் பெரும் வேட்கை கொண்டிருந்தார். கல்வி யின் மூலம் அறிவையும் திறமையை யும் வளர்க்க வழிகோலுவதே நோக்க மாகக் கொண்டிருந்தார். இத்தகைய நல்லுணர்வால் இளமை முதலே, நாட்டுப் பற்றிலும், நாட்டுக் தொண்டிலும் நாட்டமுடையவராக இருந்தார். அலிகார் பல்கலைக் கழகத் தில் மாணவராக இருந்தபோதே அண்ணல் காந்தியடிகளின் எழுத் தும் பேச்சும் இவரைப் பெரிதும் ஈர்த் தன. அ தி லும் கடையனுக்கும் கடைத்தேற்றம் நல்கும் முறையில் அண்ணல் காந்தியடிகள் 'ஆதாரக் கல்வி முறையை அறிமுகப்படுத்தி னார். அண்ணலின் ஆதாரக் கல்வித் திட்டம் டாக்டர் ஜாகீர் ஹசேனுக்கு மிகவும் பிடித்தது. இந்தக் கல்விக் கொள்கையின் சிறப்பை, அதன் பயனை நாடு முழுவதும் பரப்பவேண் டும் என உறுதிகொண்டார்.இதற்காக எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொண்டு நாடெங்கும் ஆதாரக் கல்விமுறையைப் பரப்பினார். இவர் டெல்லியில் அமைந்துள்ள ஜாமியா மிலியா பல்கலைக் கழகத் கின் துணைவேந்தர் பொறுப்பை 、星 1926ஆம் ஆண்டில் ஏற்றார். தொடர்ந்து 1948ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். இக்காலகட்டத் தில் ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தை எல்லா வகையிலும் சிறப் பாக வளர்த்தார். - அதன் பின் தான் பட்டப் படிப்புப் படித்த அலிகார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். இங்கும் எட் டாண்டுகள் அரும் பணியாற்றினார். இவரது அறிவாற்றலையும் நிர்வாகத் திறமையையும் கண்ட குடியரசுத் தலைவர் இவரை பீகார் மாநில ஆளுநராக நியமித்தார். சிறிது காலத் திற்குப்பின் 1962ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு பெற்றார். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் 1967 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடிந்தது. 1969ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள் மறைந்தார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் கல்வி வளர்ச்சியி லேயே நாட்டமுடையவராக விளங்கி னார். இந்திய அரசு நியமித்த உயர் நிலைக் கல்வி வாரியத் தலைவராக இருந்துள்ளார். இந்தியப் பள்ளிகளில் உயர் நிலைக் கல்வியின் தரம் உயர பல்வேறு வகையான திட்டங்களைத் தீட்டி அறிமுகப்படுத்தினார். வட மாநிலங்கள் பலவற்றின் கல்விச் சீர் திருத்தக் குழுவின் தலைவராக அமைந்து பல்வேறு புரட்சிகரமான கல்விச் சீர்திருத்தங்களை மேற் கொள்ள வழிகோலினார். இவர் ஆங்கிலம், உருது, இந்தி மொழிகளில் நிறைந்த புலமை பெற் றிருந்தார். இம் மொழிகளில் சிறந்த