பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

see எழுத்தாளராகவும் பேச்சாற்றல் மிக்க வராகவும் விளங்கினார். கல்விக் கொள்கை, கல்வித்திட்டம், கல்விச் சீர்திருத்தம் ஆகியவை பற்றி இம் மூன்று மொழிகளிலும் நூல்களை எழுதியுள்ளார். கிரேக்க ஞானி பிளேட்டோவின் குடியரசு' நூலை உருது மொழியில் மொழிபெயர்த்துள் ளார். இவரது இணையற்ற கல்விப் பணியைப் பாராட்டி 1954இல் ‘பத்ம பூஷண் விருதும் 1968இல் பாரத ரத்னா’ உயர் விருதும் அளித்து இந்திய அரசு சிறப்பித்துள்ளது. ஜார்ஜ் பெர்னார்டு ஷா: ஆங்கில மொழியில் மிகப் பெரும் எழுத்தாள ராக, நாடகாசிரியராகப் போற்றப்படு பவர். இவரது படைப்புகள் கருத்துக் 習。額 . d - ஜார்ஜ் பெர்னார்டு ஷா களஞ்சியமாகக் கருதப்படுகின்றன. நகைச்சுவையுடன் சிந்திக்கத் தூண் டுவன என மதிப்புரைக்கப்படு கின்றன. - `~ =च। ஜார்ஜ் பெர்னார்டு ஷா இவர் 1896ஆம் ஆண்டில் அயர் லாந்து நாட்டில் பிறந்தார். இளமை யில் கல்வியில் ஆர்வம் இல்லாத இவர்,தாயின் மூலம் இசையறிவையும் இசை நுட்பங்களையும் கற்றறிந்தார். வீட்டில் இருந்தபடியே இலக்கிய நூல்களையும் கற்றுத் தேறினார். தான் ஒரு எழுத்தாளனாக உரு வாக வேண்டும் என்ற எண்ணத் துடன் இருபதாவது வயதில் லண் டன் சென்றார். அங்கு இசை, இலக் கியத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதி புகழ் பெற்றார். நான்கைந்து புதினங்களும் எழுதினார். கார்ல் மார்க்சின் சோசலிசக் கொள்கைகளில் போரார்வம்கொண்ட ஷா சமுதாயக் குறைகளை கேலி செய்யும் வகையில் நாடகங்களை எழுதினார். சிரிப்போடு சிந்திக்கத் தூண்டும் இந்நாடகங்களை மக்கள் விரும்பிப் படித்தார்கள். மக்களி டையே பெரும்புகழ் பெற்றார். ஆங் கில மொழி எங்கெல்லாம் பேசப்பட் டதோ அங்கு எல்லாம் இவர் பெருமை பரவியது. இவரது நாடகங்களுள் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவது புனித ஜோன் (St. John) எனும் நாடகம் ஆகும். - இவர் தன் நாடகங்களுக்கு நீண்ட அழகான முன்னுரை எழுதுவது வழக்கம். அம்முன்னுரைகள் மிக உயர்ந்த உரைநடை இலக்கியமாகக் கருதப்படுகிறது. இவரது இலக்கியத் தொண்டைப் பாராட்டி 1925ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 94 வயது வரை வாழ்ந்த ஜார்ஜ் பெர் னார்டு ஷா 1950ஆம் ஆண்டில் இறந்தார். இறக்கும் வரை எழுதிக் கொண்டே இருந்தார்.