பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹெலிகாப்டர் டரும் உடையதாகவுள்ளது. கோட் டையின் அடித்தளம் கெட்டிச் செங் கற்களைக்கொண்டு உறு தி யா க அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று கோட்டைச் சுவர்களும் முட் டுச் சுவர்களால் பாதுகாப்பாகக் கட் டப்பட்டுள்ளது.இதிலிருந்து ஹாரப்பா நகர் நாட்டின் தலைநகராக இருந் திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஹாரப்பாவில் உள்ள மாளிகைகள் ஒரடுக்கு, ஈரடுக்குக் கட்டிடங்களாகக் கட்டப்பட்டுள்ளன. அக்கட்டிடங் களில் பெண்களுக்கான பகுதிகளும் தனியே அமைக்கப்பட்டுள்ளன. சுவற்றுச் செங்கற்கள் சூளையில் வேகவைக்கப்பட்ட செங்கற்களாக உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் விருந்தினர் அறைகளும் அகன்ற முற்றங்களும் உள்ளன. குப்பை போடுவதற்கான தொட்டிகளும்கூட உள்ளன. கழிவு நீர்த்தேக்கத் தொட் டிகளும் வடிகால்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலி ருந்து ஹாரப்பா மக்களின் கட்டிடக் கலைத் திறனும் நாகரிகச் சிறப்பும் தெளிவாகிறது. ஹாரப்பாவில் மிகப் பெரிய களஞ் சியப் பானை கிடைத்துள்ளது. இது 52 மீட்டர் நீளமும் 41 மீட்டர் அகல மும் 3 மீட்டர் கனமும் உள்ளதாகும். இது மிக அரிய தொல்பொருளாகக் கருதப்படுகிறது. இதில் மிக அதிக அளவில் தானியங்களைச் சேமித்து வைக்க இயலும். ஒருவேளை இது அரசு களஞ்சியப் பானையாக இருக் கக்கூடுமெனக் கருதப்படுகிறது. மேலும் இப்பகுதியில் சமையல் பாத்திரங்களும் தானியங்களை அரைத்து மாவாக்கும் திருகைகளும் அம்மி, உரல் போன்றவைகளும் கிடைத்துள்ளன. தங்கம், வெள்ளி யாலான அணிமணிகளும் கிடைத் 223. துள்ளன. முதுமையடைந்தவர்களை அடக்கம் செய்யும் முது மக்கள் தாளி யும், அவற்றுள் மனித எலும்புக் கூடு வறாரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட பானை களும் கிடைத்துள்ளன. இவற்றிலி ருந்து ஹாரப்பா மக்கள் மிகப்பெரும் நாகரிகச் சிறப்போடு வாழ்ந்திருக்கக் கூடுமெனக் கணிக்கப்படுகிறது. ஹிஜிரா: இது இஸ்லாமிய ஆண் டைக் குறிப்பதாகும். நபிகள் நாயகம் முஹம்மது (சல்) அவர்கள் மக்காவிலி ருந்து மதினா நோக்கிச் சென்ற நிகழ்ச்சி ஹிஜ்ரத் என்று அழைக்கப் படுகிறது. இதற்குக் குடிபெயர்ந்து செல்லுதல்' என்பது பொருளாகும். இதிலிருந்து ஹிஜ்ரி ஆண்டு கணக் கிடப்படுகிறது. இந்த ஆண்டு மு ைற ைய செயல்படுத்தியவர் கலீஃபா உமர் (ரலி) ஆவார். கி. பி. 622ஆம் ஆண்டு முதல் ஹிஜ்ரி ஆண்டு துவங்குகிறது. ஹெலிக்காப்டர். வானவூர்திகளில் மிகச்சிறியது ஹெலிக்காப்டர் ஆகும். இது மற்ற விமானங்களைப் போல ஓடுபாதையில் ஒடி மேலே ஏறவேண் டியதில்லை. இது நிற்கும் இடத்தி லிருந்தே நேராக மேலே ஏறவும் இறங்கவும் முடியும்.முன்னோக்கியோ பின்னோக்கியோ பறக்க முடியும்.பக்க வாட்டில் பறக்கவும் நிலையாக நிற்க வும் முடியும்.