பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 சாதாரண விமானங்களுக்கு இருப் பதுபோல இதற்கு இறக்கைகள் இல்லை. இதன் உச்சியில் மட்டுமே படுக்கை வுசமான செலுத்தி உண்டு. இது நீளமாகவும், குறுகிய அகல - ∎ “ኮ ইলি " கன் ,': ; , --

-r - { 緊要 蠶寶r望
  1. ಸ್ಕ್ರಿ..! \** : "షౌ" o sa: སྭོ། ། - 2 :

வெறலிகாப்பீர்' முடைய அலகுகளோடு கூடிய சுழலி யாகும். இச் சுழலியின் அலகு இழை கள் இரண்டு அல்லது மூன்று அல் லது நான்கு இருக்கும். இது ஹெலிக் காப்டரின் உச்சிப் பகுதியில் வெளிப் பக்கமாக இருக்கும். சுழலியின் தகடு கள் லேசாக வளைந்திருக்கும், சுழலி வேகமாகச் சுழலும்போது, விரைவாக உச்சிப் பகுதியில் காற்று வீசும். அங்குக் காற்று அழுத்தக் குறைவு ஏற்படும். அப்போது கீழ்ப் பகுதியில் காற்று அழுத்தம் அதிகமாக இருப்ப தால் ஹெலிக்காப்டர் மேல் நோக்கி எழும். ஹெலிக்காப்டரின் ம்ேல் உச்சியில் சுழல் இருப்பது போன்று வாலிலும் ஒரு சிறிய சுழலி உண்டு. இது கிடை யாக இல்லாமல் செங்குத்தாக அமைக் கப்பட்டிருக்கும் எதிரிணையாக இவ் ஹெலிக்காப்டரின் விலையும் ஹெலிக்ாப்ட" வால் சுழலி செயல்படும். இதன் மூலம் ஹெலிக்காப்டரை ஒரே இடத் தில் சுற்றிக் கொண்டிருக்கும்படி செய்ய முடிகிறது.சாதாரண விமானங் கள் முன்னோக்கிச் செல்வதன் மூலம் மேலெழும்பிப் பறக்கின்றன. ஆனால் ஹெலிக்காப்டர் விமானங்களின் மேல் உச்சியில் உள்ள சுழலி சுற்றுவதன் மூலம் நேராக மேலேஎழும்புகின்றன. ஹெலிக்காப்டரை அந்தரத்தில் ஒரே இடத்தில் நிலையாக நிற்கச் செய்ய முடியும். அப்போது சுழலியின் மேல் தூக்கும் சக்தியும் பூமியின் கீழே ஈர்ந்து இழுக்கும் சக்தியும் சமநிலை யில் இருக்கும். ஹெலிக்காப்டரை தரை இறக்க வேண்டுமானால் சுழலி யின் வேகத்தைக்குறைக்கவேண்டும். அப்போதுமெதுவாகத் தரை இறங்கும். விமானங்களைப் போல் ஹெலிக் காப்டர்களால் மிக வேகமாகப் பறக்க இயலாது. அதிகபட்சம் மணிக்கு 150 கி.மீ. வேகம் பறக்க முடியும். இதற்கா கும் எரிசக்தியின் விலையும் அதிகம். மிக அதிகம். விமானங்களால் செல்ல முடியாத இடங்களுக்கு ஹெலிக்காப்டரில் எளி தாகச் சென்று வரமுடியும். காரணம் விமானங்களுக்குத் தேவைப்படும் நீண்ட ஓடுபாதை ஹெலிக்காப்டர் களுக்குத் தேவை இல்லை. மிகச் சிறிய இடப் பரப்பில் இறங்கி, ஏற முடியும்.போரின்போது காயமடைந்த போர் வீரர்களையும் விபத்துக்குள் ளானவர்களையும் உடனுக்குடன் காப்பாற்ற முடியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளையும்கொண்டு சென்று தந்துதவ முடியும். ஜீப் போன்ற சிறு வாகனங்களை தூக்கிச் செல்லவும் முடியும். இடர்ப்பாடான குறுகிய தொலைவு விரைந்து சென்று வர ஹெலிக்காப்டரே ஏற்ற வாகன மாக இருந்து வருகிறது.