பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டார்க்டிக்கா பிரச்சாரம் செய்தார். இந்தச் சமூகக் கேடுகளை விளக்கும் கதை, கட் டுரை, நாடகம், திரைப்படங்களை எழுதி மக்களைச் சிந்திக்கத் தூண்டி 6ar ↑ ↑ . இவர் மிகச் சிறந்த பத்திரிகையாள ராகவும் விளங்கினார். திராவிட நாடு முதலாக ஏடுகள் பலவற்றின் ஆசிரிய ராக விளங்கினார். திராவிட முன் னேற்றக் கழகம் எனும் பேரமைப்பை உருவாக்கினார். மாநிலங்கள் அவை உறுப்பினராகவும் தமிழ்நாடு சட்டப் பேரவை அங்கத்தினராகவும் பணி யாற்றினார். 1967ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சராகப் பொறுப் பேற்றார். அதுவரை சென்னை மா நிலம் என இருந்த பெயரை மாற்றி "தமிழ் நாடு மாநிலம் என அமைத் தார். தமிழர் திருமண முறையைச் சட் டப்படி செல்லுபடியாக்கினார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிக்கொள்கையை சட்டமாக்கினார். அண்டார்க்டிக்கா: அ ண் டார் க் டிக்கா உலகின் ஐந்தாவது கண்ட மாகும். இது தென் துருவத்தைச் சுற்றியுள்ள நிலத்தையும் பெருங்கட லையும் உள்ளடக்கியதாகும். இந்தி யாவும் சீனாவும் சேர்ந்தால் எவ்வ ளவு பரப்பு இருக்குமோ அதைவிட அதிகப் பரப்பைக் கொண்டதாகும். இக்கண்டம் 95 விழுக்காடு உறை பணியால் மூடப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்திற்கு 70 மீ. உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு கோடை காலம் முழுமையும் தொடர்ந்து பகலாக இருக்கும், குளிர்காலம் முழுமையும் இருட்டாக இருக்கும். இங்கு மழையே பெய்வ தில்லை. அண்டார்க்டிக்காவில் மிக உயர மான பனிமலைகள் பல உள்ளன. 17 பனிமயமான இங்கு எரிமலைகளும் உள்ளன. - இங்கு பிற நிலப்பகுதிகளில் காணப் படுவது போன்ற தாவர வகைகள் எதுவும் கிடையாது. சின்னஞ்சிறு செடிகளும், பாசி, பாசிக்காளான், நுண்ணுயிர் பூஞ்சணங்கள் மட்டுமே உண்டு. கிரில் போன்ற மீனினங் களும் பெங்குவின் பறவைகள், கடல் நாய், கின்றன. திமிங்கலங்களும் இருக் இக் கண்டத்தை முதலில் கண்ட றிந்தவர்கள் நார்வே நாட்டினர்கள் ஆவர். அதன் பிறகு ஆங்கிலேயர் களும் ரஷ்யர்களும் சென்று வந்தனர். இக் கண்டத்தை ஆய்வுக்கான “பொதுக் கண்டமாக உலக நாடுகள் அறிவித்துள்ளன. அண்மைக் காலமாக இந்தியா இக் கண்டத்திற்குப் பலமுறை ஆய்வாளர் களை அனுப்பியுள்ளது. அங்கு *தட்சின் கங்கோத்திரி என்ற ஆய்வு நிலையத்தை நிலையாக அமைத்து இந்திய ஆய்வாளர்கள் அங்கே ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதுவே அங்குள்ள நிலையான ஆய்வுக் கூடம் ஆகும்.