பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணைகள் யம் ஆகும். 'இது வெண்மை நிற முடைய தனிமம் ஆகும். ஒரு டன் யுரேனியத்தின் மூலம் பதினாயிரம் டன் நிலக்கரி ஆற்றலைப் பெற முடியும். இந்தியாவில் பம்பாயில் அப்சரா, சைரஸ், பூர்ணிமா, துருவா ஆகிய ஆராய்ச்சி அணு உலைகள் அமைந் துள்ளன. தமிழ்நாட்டில் கல்பாக்கம் எனுமிடத்தில் கா மி க ரி எனும் ஆராய்ச்சி அணு உலை உள்ளது. அனுமின் உலைகள் தமிழ்நாட் டில் கல்பாக்கத்திலும் மகாராஷ்டிரத் திலும், குஜராத் எல்லையில் தாரா பூரிலும் ராஜஸ்தானிலும் உள்ளன. அணு சக்தி அணுகுண்டுகள் மூலம் வெளிப்பட்ட சக்தி ஜப்பானிய நகரம் இரண்டை அழித்தது. அதன் பின் அணுசக்தியை நல்ல காரியங்களுக் குப் பயன்படுத்த முயற்சி மேற்கொள் ளப்பட்டது. அணுசக்தியிலிருந்து வெளிவரும் மாபெரும் வெப்ப ஆற்றலைக் கொண்டு நீராவி தயாரிக்கலாம்.அந்த நீராவி ஆற்றலைக் கொண்டு எந் திரங்களை இயக்க முடியும். அணு மின் உலைகள் மூலம் அதிக அள வில் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். அணுசக்தியைக் கொண்டு கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் போன்றவை கட் டப்பட்டுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் அணுமின் உலை கள் மூலம் மிகப்பெரும் அளவில் மின் சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் பம்பாய் நகருக்கருகே : டிராம்ப்பே எனுமிடத்தில் அணுசக்தி ஆராய்ச்சி நிலையம், இயங்கி வருகிறது.அணுசக்தி வெளிப் படும்போது அணுக்கதிர் வீச்சு’ வெளிப்படும். இது மனிதர்களுக்குத் தீங்கு செய்யும். இதற்கான தக்க பாது காப்புகள் அணு உலைகளில் அமைக் கப்பட்டுள்ளன. அணைகள்: ஆண்டில் ஒரு குறிப் பிட்ட பருவ காலத்தில் மட்டுமே அதி கமாக மழை பெய்யும். இதை மழைக் காலம்’ என்று அழைக்கிறோம். இக் காலத்தில் பெய்யும் மழை நீர் திரண்டு ஒடைகளாகவும் ஆறுகளாகவும் பெருக்கெடுத்து ஒடி கடலில் கலக்கும் கடலில் கலக்கவிடாது இந்நீரோட் டங்களைத் தடுத்து, நீரைச் சேகரித்து தேக்கி வைக்க உயர்ந்த கரைகளோடு அமைக்கப்படும் கட்டுமானமே “அணை ஆகும். சிறிய அளவில் அமைவது ஏரி. பெரிய அளவில் அமைவது அணை ஆகும். இவ்வாறு தேங்கும் நீர் அணையின் கொள்ளளவு வரை நிரம்பும். அதற்கு மேல் வந்து சேரும் நீர் அணையின் ஒரு பகுதியிலிருந்து தானாகவே வெளியேறிச் சென்றுவிடும். இந் நீர்ப் போக்குப் பகுதிக்குக் 'கலிங்கு” என்று பெயர். முன் காலத்தில் அணைகள் மண் ணால் உருவாக்கப்பட்டன. பின்னர் கல்லும்காரையும் கொண்டு கட்டப்பட் டன. இன்று நவீன அறிவியல் உத்திகளைக் கொண்டு இரும்பும் சிமென்டும் கொண்ட கான்கிரீட்டால் உருவாக்கப்படுகின்றன. அணையில் தேங்கும் நீரை மழை இல்லாத காலத்தில் மதகுகள் வழி யாக வாய்க்கால்களில் ஒடச் செய்து பாசனத்திற்குப் பயன்படுத்துவார்கள். குழாய்கள் மூலம் நீரை வெளிக் கொணர்ந்து குடிநீராகவும் பயன் படுத்துவார்கள். பெரிய அணைகளில் தேங்கும் நீரை மதகுகள் வழியே வேகமாகப் பாயச் செய்து, அதன்